பொதுத்துறையில் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து மன்னாரில் அறிவுப் பகிர்வு நிகழ்வு

Published By: Vishnu

05 Nov, 2026 | 05:43 AM
image

டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Digital & AI) தொழில்நுட்பங்களைப் பொதுத்துறையில் பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் தொடர்பான அறிவு பகிர்வு நிகழ்வு புதன்கிழமை (4) புதன் கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

தேசிய உற்பத்தித்திறன் செயலகம் (National Productivity Secretariat), தூய்மையான இலங்கை செயலகம் (Clean Sri Lanka Secretariat) மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் காலை  இடம்பெற்றது.

பொதுத்துறையின் டிஜிட்டல் செயற்பாடுகளை வலுப்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களை அரச அலுவலகங்களின் அன்றாடப் பணிகளில் பயனுள்ள வகையில் பயன்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக அரச சேவைகளின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.

குறித்த நிகழ்வில் தேசிய உற்பத்தித்திறன் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், துறைசார் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொதுத்துறையில் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவித்து, நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக அரச சேவைகளை மேலும் வினைத் திறனுடனும் பயன் உறுதியுடனும் முன்னெடுப்பதற்கான முக்கியத்துவத்தை இந்நிகழ்வு வலியுறுத்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் மேலதிக...

2026-11-12 23:00:52
news-image

எதிர்க்கட்சியின் யோசனைகளை நிறைவேற்றினால் ஜனாதிபதியுடன் தேநீர்...

2026-11-12 18:08:33
news-image

எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு லாஃப்...

2026-11-12 12:53:37
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின்...

2026-11-12 18:09:01
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!  

2026-11-12 22:04:48
news-image

அரசின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால்...

2026-11-12 12:45:37
news-image

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவை இரத்து...

2026-11-12 21:31:33
news-image

நான்கு மணி நேரத்தைவிட தாண்டிய  வரவு...

2026-11-12 19:55:05
news-image

ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள்...

2026-11-12 18:53:59
news-image

டித்வா அழிவு புனருத்தாபனத்திற்கான குறைநிரப்பு மதிப்பீடு

2026-11-12 18:29:38
news-image

கொக்கிளாய் பாலத்திற்காக 600 மில்லியன் ரூபாய்நிதி...

2026-11-12 18:09:22
news-image

சுற்றுலா அபிவிருத்தி அறவீட்டினை நீக்குதல்

2026-11-12 18:05:44