பேருவளை தேர்தல் தொகுதியில் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீல.சு.க. இணைந்து போட்டியிடும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியது பொய்யான தகவல் என, பேருவளை ஐ.தே.க. அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான இஃப்திகார் ஜெமீல் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (1) நடைபெற்றபோது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்படி தகவலை வெளியிட்டிருந்தார்.

இது பற்றிக் குறிப்பிட்ட இஃப்திகார் ஜெமீல், பேருவளையில் ஐ.தே.க., ஸ்ரீல.சு.க. இணைந்து போட்டியிவது குறித்து அமைச்சர் ராஜிதவுடன் எவ்விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படாத நிலையில், அவர் இவ்வாறு கூறியிருப்பது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் என்று குறிப்பிட்டுள்ளார்.