சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறுபட்ட நெருக்கடிகளை முன்நிறுத்தி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள தொடர் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதன்கிழமை (4) நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 வைத்தியசாலைகளுக்கு முன்பாக அச்சங்கத்தின் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கமைய, காலி தேசிய வைத்தியசாலை, மாத்தறை மாவட்டப் பொது வைத்தியசாலை, அம்பாந்தோட்டை மாவட்டப் பொது வைத்தியசாலை, சிலாபம் மாவட்டப் பொது வைத்தியசாலை, பதுளை போதனா வைத்தியசாலை, குளியாபிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு முன்பாக நண்பகல் 12.00 மணியளவில் ஒன்றுக்கூடி வைத்தியர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தற்போதைய சுகாதாரத்துறையில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள விசேட வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக அரசாங்கத்திற்குப் பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் கலந்துரையாடல்களுக்கு அழைப்பு விடுக்காது காலம்தாழ்த்தி வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
வைத்தியர்களின் மனிதவள பகுப்பாய்வை முறையே நடைமுறைப்படுத்துதல், நிறுத்தப்பட்டுள்ள மேலதிக நேரக் கொடுப்பனவில் மூன்றில் ஒரு பங்கை உடனடியாக வழங்குதல் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப போக்குவரத்துக் கொடுப்பனவுகளை அதிகரித்தல் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு நாம் கோரிக்கை விடுத்த போதிலும், அரசாங்கத் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கத நிலையில், நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாகப் படிப்படியாகப் போராட்டங்களை நடத்தத் தீர்மானிக்கப்பட்டதாக அச்சங்க உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே எப்போதும் தயாராக உள்ளதாகவும், அரசாங்கம் கலந்துரையாடலுக்குச் சந்தர்ப்பம் வழங்காது தொடர்ந்தும் அலட்சியப்படுத்துமாயின் எமது போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த நேரிடும் எனவும“ அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM