கிவில் ஓயா திட்டத்தால் 13,000 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்படும் அபாயம்; மனித – யானை மோதல் தீவிரமடையும் – நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டு

Published By: Vishnu

05 Nov, 2026 | 05:05 AM
image

வவுனியா வடக்கில் மனித – யானை மோதல் ஏற்கனவே தீவிரமாகக் காணப்படும் நிலையில், கிவில் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக சுமார் 13,000 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நாட்டின் வனப்பாதுகாப்பு பிரதேசங்களும், தேசிய பூங்காக்களும் வேட்டைக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் வனவளங்களை அழிப்பவர்களால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள விடயம் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான புதன்கிழமை (04) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களே இந்த விடயத்தை சபையில் சுட்டிக்காட்டினார்.

மேலும், திட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்களும் எதிர்கால நோக்கற்ற செயற்பாடுகளும் வன வளங்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், வவுனியா வடக்கில் ஒரு மணி நேரத்திற்கு முன்புகூட 45 வயதுடைய விவசாயி ஒருவர் வயலுக்குச் சென்றபோது யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த ஊருக்கு அண்மையில் உள்ள குளவிசுட்டான் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தை வவுனியா வடக்கின் நயினாமடு பகுதியில் அமைக்க ஆரம்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தற்போது அங்கிருந்து மிகவும் குறைந்த மக்கள் வாழுகின்ற போகஸ்வெவ பகுதிக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் சபையில் குறிப்பிட்டதோடு குறித்த அலுவலகத்தினை நயினாமடு பகுதியிலேயே அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், வவுனியா நகரப் பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், வீடுகளில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதற்குக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே, மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்துவதற்கும், குரங்குகளின் தொல்லைக்குத் தீர்வு காண்பதற்கும் விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழல் குற்றச்சாட்டுகள், 323 கொள்கலன் விவகாரம்...

2026-11-14 17:15:21
news-image

80,000க்கும் அதிகமான வேலையில்லாப் பட்டதாரிகள் வீதியில்...

2026-11-14 16:46:43
news-image

வெளிநாட்டுப் பயங்கரவாதி போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம்...

2026-11-14 16:46:26
news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03