பசரிச்சேனை உப தபால் அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு : உதுமாலெப்பை எம்.பி. கோரிக்கை!

04 Nov, 2026 | 07:29 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அம்பாறை மாவட்ட பசரிச்சேனை உப தபால் நிலைய தபால் அதிபருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மீண்டும் குறித்த உப தபால் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அரசாங்கம் அவரை வேறு இடத்துக்கு இடம் மாற்றி புதிய ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (4) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிப்பு மற்றும் 2026ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள பசரிச்சேனை உப தபால் நிலைய தபால் அதிபர், கடந்தவருடம் சுமார் 20 ஆயிரம் கடிதங்களை விநியோகிக்காமல் பதுக்கிவைத்துள்ளார். அதேநேரம் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் அந்த பிரதேச மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவரை உடனடியாக சேவையில் இருந்து இடைநிறுத்தி அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வருகின்றன.

அதேநேரம் அந்த பிரதேச மக்களுக்கு வந்திருந்த வங்கிக்கடிதங்கள் இன்னும் பல முக்கிய கடிதங்களை அவரது வீட்டில் மறைத்துவைத்திருந்ததாகவும் அவரை அந்த பால் நிலையத்தில் இருந்து இடமாற்றுமாறும் அந்த பிரதேச பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் ஊர் மக்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள். அந்த கடிதங்களை இந்த சபையில் சமர்ப்பிக்கிறேன். அதேநேரம் தபால் அதிபருக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடங்கிய மகஜரையும் சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு இருக்கும்போது, குறித்த உப தபால் நிலைய அதிபரை மீண்டும் அந்த தபால் நிலைத்திலேயே பதவியில் அமர்த்தி இருப்பதாக கடிதம் அனுப்பி இருக்கிறது. அவர் இன்று மீண்டும் பதவியை ஏற்றுக்கொள்ன அங்கு சென்றபோது, மக்கள் ஒன்றிணைந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதனால் குறித்த தபால் அதிபரை உடனடியாக வேறு இடத்துக்கு இடம் மாற்றி, வேறு ஒருவரை பசரிச்சேனை உப தபால் நிலையத்துக்கு நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24