(நெவில் அன்தனி)
செனகல் தேசத்தின் தலைநகர் டாக்கரில் நடைபெற்றுவரும் 4ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பங்குபற்றும் ஐவரில் இதுவரை மூவர் மாத்திரமே களம் இறங்கியுள்ளனர்.

அவர்களில் எச் குழுவில் பெண்களுக்கான பெட்மின்டன் ஒற்றையர் போட்டியில் பங்குபற்றிய நெத்மி ரத்நாயக்க தான் விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மாத்திரம் வெற்றிபெற்று திருப்தி அடைந்தார்.
தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை யுஸுனோ வட்டனாபெயிடம் 2 நேர் செட்களில் தோல்வி அடைந்த நெத்மி, இரண்டாவது போட்டியில் மொரிஷியஸ் வீராங்கனை எல்சா ஹவ் ஹொங்கை 2 நேர் செட்களில் நெத்மி வெற்றிகொண்டு வரலாறு படைத்தார்.

எனினும் நேற்று இரவு நடைபெற்ற இந்தோனேசிய வீராங்கனை அயுடிஸ் மிப்தாக்குல் புத்திரிக்கு எதிரான தனது கடைசிப் போட்டியில் கடும் சவால் விடுத்து விளையாடிய நெத்மி துரதிர்ஷ்டவசமாக 1 - 2 என்ற செட்கள் (18 - 21, 22 - 20, 15 - 21) வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
டரெக் ப்ளக் நீச்சலில் 16ஆவது இடம்
டாக்கர் நீர்நிலை நிலையத் தடாகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சலுக்கான 6ஆவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் டரெக் ப்ளக், அப் போட்டியை 24.54 செக்கன்களில் நிறைவுசெய்து 5ஆவது இடத்தைப் பெற்றார்.

ஆனால், 7 தகுதிகாண் சுற்றுகளில் பங்குபற்றிய 55 வீரர்களில் டரெக் ப்ளக்கினால் 16ஆவது இடத்தையே பெற முடிந்தது.
ஜூலி ஹோப் 42ஆவது இடம்
இதே தடாகத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சலுக்கான 4ஆவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனை ஜூலி ஹோப் 7ஆவது இடத்தைப் பெற்றார்.

அப் போட்டியை 29.06 செக்கன்களில் நிறைவு செய்த ஜூலி ஹோப், 9 தகுதிகாண் சுற்றுகளில் பங்குபற்றிய 68 வீராங்கனைகளில் ஒட்டுமொத்த நிலையில் 42ஆவது இடத்தைப் பெற்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM