(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தமக்கும் பாதாள குழுக்களுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படும் என்ற அச்சத்தில் நாமல் ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவிப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. இந்த சட்டமூலம் நாட்டு மக்களுக்கு ஒருபோதும் எதிரானதாக அமையாது. பாதாளக் குழுக்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு கொண்டுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (4) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பாதாளக் குழுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கவேண்டும். கடுமையான சட்டங்கள் இயற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் பொதுமக்கள் உறுதியாகவுள்ளார்கள். கடந்த காலங்களில் பாதாளக் குழுக்களுக்கும், போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அரசியல் ஆதரவுடன் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டார்கள்.
போதைப்பொருள் மற்றும் பாதாளக்குழுக்களை ஒழிக்க வேண்டுமாயின் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்க வேண்டுமாயின் வலுவான சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும்.இதற்காகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு எதிராக தற்போது நடைமுறையில் உள்ள குறைப்பாடுகளை போதைப்பொருள் வர்த்தகர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். நாட்டை விட்டு தப்பிச் சென்றார்கள்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தான் கலக்கமடைந்துள்ளார்கள். இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ' பச்சைக் குத்துதல், தலைமுடியை நீளமாக வளர்த்தல்' தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆவேசமாக பேசுகிறார்.ஆனால் இந்த சட்டமூலத்தில் பாதாளக்கு ழுக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமை நாமல் ராஜபக்ஷ எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தமக்கும் பாதாளக் குழுக்களுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படும் என்ற அச்சத்தில் நாமல் ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவிப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல,
கடந்த அரசாங்கம் பாதாள குழுக்களின் உறுப்பினர்களுடன் டீல் செய்தது. முன்னாள் நீதியமைச்சரின் மகன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹரக் கட்டாவின் மனைவியிடம் ஊழல் பெற்றார்கள்.இதுபோன்று பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும் என்று அச்சடைந்துள்ளார்கள். அதனால் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் சாதாரன மக்களுக்கு ஒருபோதும் எதிராக அமையாது என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM