(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)
காலிமுகத்திடலில் 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 37 சந்தேக நபர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு சட்ட மா அதிபரின் ஆலோசனைகளுக்காக பெப்ரவரி 3ஆம் திகதி அழைக்கப்படும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் மேற்படி வழக்கு விசாரணைக்க எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் மன்றில் முன்னிலையான விசாரணை அதிகாரிகள், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து, அது தொடர்பான ஆவணங்கள் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கமைய, சந்தேக நபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சட்ட மா அதிபருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
தொடர்ந்து விடயங்களை முன்வைத்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரிகள், அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பாகச் சந்தேக நபர்களுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இவ்வழக்கின் 26ஆவது சந்தேக நபரான மஹிந்த கஹந்தகம இச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அதற்கமைய, குறித்த சந்தேக நபரை அடுத்த வழக்கு விசாரணையின்போது சிறைச்சாலை அதிகாரிகளின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
அதற்கமைய இவ்வழக்கு பெப்ரவரி 3ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM