அரச எதிர்ப்புச் சட்டமூலங்களை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் : உதுமாலெப்பை வலியுறுத்தல்

04 Nov, 2026 | 07:07 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் சமர்ப்பித்திருக்கும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டம் மக்களின் உரிமைகளைப் பறித்து மீண்டும் பொலிஸாருக்கும், இராணுவத்திற்கும் அதிகாரங்களை வழங்கி நமது நாட்டை மீண்டும் ஒரு யுத்த சூழ்நிலைக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடுகளாகவே பார்க்கக்கூடியதாக உள்ளது. அதனால் அரசாங்கம் இந்த சட்டமூலங்களை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிப்பு மற்றும் 2026ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்த ஆளுங்கட்சியினர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நமது நாட்டில் பயங்கரவாதச் சட்டத்தை இல்லாமல் செய்வோம் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

இச்சட்டமூலம் மக்களின் குரல்களை நசுக்குவதுடன் மக்களின் உரிமைகளைப் பறித்து மீண்டும் பொலிஸாருக்கும், இராணுவத்திற்கும் அதிகாரங்களை வழங்கி நமது நாட்டை மீண்டும் ஒரு யுத்த சூழ்நிலைக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடுகளாகவே இதனை பார்க்கக்கூடியதாக உள்ளது.

புதிய சட்டத்தின் மூலம் நீதிமன்றத்தின் தலையீடுகளின்றி பொலிஸாரே நேரடியாக ஒருவரை கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தால் கைதிகள் சித்திரவதை அனுபவிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் இயக்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், இலங்கையின் சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் என பல அமைப்புகளும் பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தினை பாதுகாக்கும் சட்டமூலம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனவே இச்சட்டமூலத்தினை மீளாய்வு செய்யும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது. இச்சட்டமூலம் அதிகாரிகளுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கி அடிப்படை மனித உரிமைகளை பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் சட்டங்களிலேயே மிகவும் கவலைக்குரிய சட்டங்களில் ஒன்றாக சர்வதேச மன்னிப்புச் சபை விவரித்துள்ளது.

சட்டமூலத்தின் கீழ் சந்தேக நபர்களை விசாரணையின்றி 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும் என்றும் மூத்த பொலிஸ் அதிகாரிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியங்களாக பயன்படுத்த அனுமதிக்க முடியும் என்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த ஊடகச் செய்திகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்றும் மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24