(எம்.மனோசித்ரா)
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் நிலப்பரப்போ அல்லது கடல் பிராந்தியமோ எந்தவொரு வழியிலும் பயன்படுத்தப்பட ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலோன்னே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிராந்திய சமுத்திர ஒத்துழைப்பு குறித்த மாநாடொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்தியாவும் இலங்கையும் வெறும் சமுத்திர எல்லையை மட்டும் பகிர்ந்துகொள்ளவில்லை. மாறாக, பாதுகாப்பையும் பகிர்ந்துகொள்கின்றன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய, இந்தியாவின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்கும் வகையில் இலங்கை பிராந்தியம் ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற அர்ப்பணிப்பை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்தக் கொள்கை ரீதியான அர்ப்பணிப்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான சமுத்திர ஆராய்ச்சி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பேரிடர் ஆயத்தநிலை போன்ற அறிவியல் சார்ந்த ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு வலுவான அடித்தளமாக அமைகிறது.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலமானது நாட்டின் நிலப்பரப்பை விட எட்டு மடங்கு பெரியதாகும். எனவே, கடல் வளங்கள், மீன்பிடித்துறை, துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு என்பன இலங்கையின் எதிர்காலத்துக்கு மிக முக்கியமானவை. எந்தவொரு நாடும் தனித்து நின்று கடலைப் பாதுகாக்க முடியாது என்பதால் பிராந்திய ஒத்துழைப்பு அவசியமாகிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட தித்வா புயலின்போது, கொழும்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பல்கள் சில மணிநேரங்களிலேயே நிவாரணப் பணிகளைத் தொடங்கின.
அவசர காலங்களில் இலங்கைக்கான முதல் மற்றும் மிகப்பெரிய உதவியாளராக இந்தியாவே விளங்கியுள்ளது. எனவே, இரு நாட்டு விஞ்ஞானிகளிடையே கடல்சார் தரவுகள் மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பகிர்ந்துகொள்வதுடன், பிராந்தியத்தின் நீலப் பொருளாதாரம் மற்றும் கடல்சார் ஆளுகையை வலுப்படுத்த இளம் வல்லுநர்களிடம் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM