சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை அரசாங்கம் இழந்துவிட்டது: முஜிபுர் ரஹ்மான்

04 Nov, 2026 | 04:17 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக அமெரிக்காவின் 17 மில்லியன் டொலர் நன்கொடையை பெற்றுக்கொண்டு சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை அரசாங்கம் இல்லாமலாக்கிக்கொண்டுள்ளது. அதேநேரம் ஆசிய ஒலிபரப்பு சங்கத்தின் சம்மேளனத்துக் அரசாங்கம் வழங்கிய 10கோடி ரூபா அரசாங்கத்தின் பணம் இல்லை என்றாரல், ஜனாதிபதி ஏன் அதற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்கிறேன் என  ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின்கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிப்பு மற்றும் 2026ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

துறைமுகத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கம் 17 மில்லியன் டொலர்களை அமெரிக்காவிடம் நன்கொடையாக பெற்றுக்கொண்டு அந்த பகுதியில் சீசீடிவி கமராக்களை பொருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் மூலம் சீனாவின்  392 மில்லியன் டொலர் முதலீட்டு வேலைத்திட்டம் எமக்கு இல்லாமலாகி இருக்கிறது. அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவமே இதற்கு காரணமாகும்.

அதனால் வல்லரசு நாடுகள் எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வரும்போது, அதனை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய தவறினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வரமாட்டார்கள்.

துறைமுகத்தில் சீனாவின் வேலைத்திட்டத்துக்கு அருகில் அமெரிக்காவின் சீசீடிவி கமராக்களை பொருத்துவதற்கு எடுத்த நடவடிக்கை காரணமாகவே சீனாவின் 392 மில்லியன் டொலர் எமக்கு இல்லாமல்போயிருக்கிறது.

அத்துடன் ஆசிய ஒலிபரப்பு சங்கத்தின் சம்மேளனம் அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அந்த சங்கத்துக்கு அரசாங்கம் 10 கோடி ரூபா வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த பணம் அரசாங்கத்தின் பணம் அல்ல என அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை தீர்மனங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

அப்படியஎன்றால், அந்த பணத்தை வழங்குவதற்கு  ஜனாதிபதி ஏன் அமைச்சரவைக்கு மகஜர் சமர்ப்பித்து அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்கிறேன்.

சுற்றுலா அபிவிருத்தி மேம்பாட்டு திட்டத்திற்கு செலவழிக்கப்படும் நிதி திறைசேரியின் பணமாகும். அது மக்களின் பணமாகும். அந்த பணத்தைத்தான் அரசாங்கம்  ஆசிய ஒலிபரப்பு சங்கத்தின் சம்மேளனத்தை நடத்துவதற்கு வழங்கி இருந்தது.

இதற்கு முன்னர் 2014இல் சுற்றுலா துறை மேம்படுத்துவதற்காக பசில் ராஜபக்ஷ்  12இலட்சம் டீசேர்ட் தைப்பதற்காக 7.8 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டிருந்தார். இதுதொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கு விசாரணை அண்மையில் இடம்பெற்றபோது, கோட்டை நீதிமன்ற நீதிபதி, பசில் ராஜபக்ஷ்வை கைதுசெய்யுமாறு பகிரங் உத்தரவொன்றை பிரப்பித்திருந்தார்.

இதுவும் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு என தெரிவித்து அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்காகும். அதனால் சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், ஜனாதிபதிக்கும் இந்த உத்தரவு செல்லுபடியாகும்.

இதேவேளை கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள பி,டீ சிறிசேனகுரே மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் கடந்த மாதம்  30ஆம் திகதி கூட்டம் ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி அங்கு வருவதால், கடந்த 27ஆம் திகதி முதல் அந்த மைதானம் மூடப்பட்டுள்ளது.

தற்போது எதிர்வரும் 7ஆம் திகதி தொழிற்சங்க சம்மேளத்தின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் அங்கு இடம்பெற இருப்பதால் தொடர்ந்தும் அந்த மைதானம் மூடப்பட்டிருக்கிறது.

குறித்த மைதானம் மாணவர்கள்  கால்பந்தாட்ட பயிற்சிகளை மேற்கொண்டுவரும் மைதானமாகும். காலை நேரத்தில் அந்த பிரதேசத்தில் இருப்பவர்கள் அந்த மைதானத்தில் உடல் பயிற்சி மேற்கொண்டுவருகிறார்கள்.

ஆனால்   ஜனாதிபதி வருவதால், கடந்த 27 திகதி முதல் அந்த மைதனம்  மூடப்பட்டு, அங்கு யாரும் நுழையாமல் இருப்பதற்கு பொலிஸ் காவல் போடப்பட்டிருக்கிறது.  பிரபுக்கள் பாதுகாப்பு அற்றவர்கள் என்றே தெரிவித்து வந்தார்கள். ஆனால் தற்போது யுத்த காலத்தில் கூட இல்லாத பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24