அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் மாபெரும் போராட்டம் : ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

04 Nov, 2026 | 04:13 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகள், அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் அனைத்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பிரம்மாண்ட போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் செயலாளரும் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான பிரியந்த பத்பேரிய தெரிவித்தார்.

மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய தற்போதைய அரசாங்கம், தனக்குக் கிடைத்த மக்கள் ஆணைக்கு நியாயமாக செயற்படவில்லை. மக்களின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அதிகாரத்தைப் பலவந்தமாகத் தக்கவைத்துக்கொள்வதற்கே அரசாங்கம் முற்படுகிறது.

'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற கொள்கைப் பிரகடனத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைக் கைவிட்டு, தற்போது புதிய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக கடந்த காலத்தில் வீதியில் இறங்கிப் போராடிய ஹரினி அமரசூரிய, விஜித ஹேரத் மற்றும் வசந்த சமரசிங்க போன்றவர்கள் இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன், அவசரமாக மீண்டும் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவரத் துடிப்பது ஏன்? ஜனநாயகத்தை ஏற்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று பாதுகாப்புச் செயலாளருக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கி, பொலிஸ் இராச்சியத்தை உருவாக்க முயல்கின்றனர். ஹோமாகம கொலை மற்றும் கடுவெல துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் பொலிஸாரின் தன்னிச்சையான போக்கைப் பிரதிபலிக்கின்றன.

நாட்டின் பொருளாதாரம் முற்றாகச் சீர்குலைந்துள்ளது. உலக வங்கியின் தரவுகளின்படி வேலையின்மை 43 சதவீதமாகவும், வறுமை 63 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதுடன், உணவுப் பணவீக்கம் 8.7 வரை உயர்ந்துள்ளது. மக்கள் ஒரு வேளை உண்டு மறுவேளை பட்டினியால் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அஸ்வசும நிவாரணம் 14 இலட்சம் பேருக்கு நிறுத்தப்பட்டமை மற்றும் புற்றுநோய் மருத்துவமனையில் 29 அத்தியாவசிய மருந்துகள் இல்லாமை போன்ற பாரதூரமான பிரச்சினைகளால் அரசாங்கத்தின் உள்ளராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் மேயர்கள் இராஜினாமா செய்து வருகின்றனர்.

அதேவேளை, நாட்டின் கல்வி முறைமை முற்றாகச் சீர்குலைந்துள்ளது. கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியேறிய 500 ஆசிரியர்கள் வீடுகளில் இருக்கும்போது, தரமற்ற பட்டதாரிகளை இணைத்துக் கொண்டு ஆசிரியர் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது. 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பாடசாலைகளுக்கு வழங்கும் ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் பஸ்களைக் கூட நிராகரிக்கும் குறுகிய மனப்பான்மையுடன் அரசாங்கம் செயற்படுகிறது.

எனவே, இந்த அடக்குமுறை பயங்கரவாதச் சட்டத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் நாளை வெள்ளிக்கிழமை அனைத்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் மக்கள் அமைப்புகள் இணைந்து கொழும்பை நோக்கி வரவுள்ளன. அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24