மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் ஜனாதிபதி மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்படவில்லை – கவீந்திரன் கோடீஸ்வரன்

04 Nov, 2026 | 04:06 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மட்டக்களப்பு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் ஜனாதிபதி மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல் அரச அதிகாரிகள் முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள். மேய்ச்சல் தரை பிரச்சினையை  பாரதூரமாக்கும் வகையில் தான் ஒரு தரப்பினர் செயற்படுகிறார்கள் என  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (04) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின்  ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசாங்கம் பல்வேறு சிறந்த  விடயங்களை மேற்கொள்கின்றது. அதில் உற்பத்தி ரீதியான மற்றும் ஏற்றுமதி ரீதியான பல முன்னேற்றகரமான விடயங்களை மேற்கொண்டாலும் இறக்குமதி செலவு மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. இந்த அரசாங்கம் ஊழலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அத்துடன் சமத்துவம் தொடர்பில் கதைக்கும் அரசாங்கம் அனைத்து மக்களையும் சரியான முறையில் கையாள வேண்டும். கடந்த அரசாங்கம் செயற்பட்டதை போன்று இந்த அரசாங்கம் செயற்படக்கூடாது.  

இந்த நாட்டில் ஆட்சியை கேட்கவோ, ஆட்சியை பிளவுபடுத்தவோ, ஆட்சியை இல்லாமல் செய்வதற்கோ தமிழ் அரசுக் கட்சி வரவில்லை. இந்த நாட்டில் எங்களின் இனப்பிரச்சினை, எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதற்காகவே மக்கள் எங்களை தெரிவு செய்துள்ளனர்.

இப்போது ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இறக்குமதி செலவை குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகிறது.  ஆனால் வெளிநாடுகளில் இருந்தே பால்மா,விவசாய பொருட்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் இங்கே உற்பத்திசார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் நாங்கள் பின்தள்ளப்பட்டவர்களாக இருக்கின்றோம். தரமற்ற பால்மாவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். ஆனால் இங்கே பால் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும்.

மயிலத்தமடு மாதவனை மற்றும் வட்டமடு ஆகிய இடங்களில் உள்ள பிரச்சினைகளை பார்க்கும் போது அங்கு பண்ணையாளர்களின் இலட்சக்கணக்கான மேடுகளை மேய்ப்பதற்கு மேய்ச்சல் தரையில் இருக்கும் மாடுகளை கொலை செய்கின்றனர். மாடுகள் உண்பதற்கு உணவில்லாத துர்ப்பாக்கிய நிலை உள்ளது. வட்டமடுவில் பண்ணையாளர்கள் மிகவும் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வனவளத்துறை  திணைக்களம் அவர்களை வெளியில் விரட்டும் நிலைமை காணப்படுகின்றது. ஆயிரக் கணக்கான பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதேபோன்று மயிலத்தமடுவில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மயிலத்தமடு காணிகளை மேய்ச்சல் தரைக்கு  தீர்வு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அத்துடன் கொழும்பு மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களும் அது தொடர்பில் உத்தரவிட்டுள்ளன. ஆனால் ஜனாதிபதி கூறிய விடயத்தை இருக்கும் அதிகாரிகள் சரியாக கேட்கவில்லையா? என்ற கேள்விகள் எழுகின்றன. அத்துடன் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வழங்கும் போது அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் ஏன் தாமதம் ஏற்படுகின்றது? இந்த நாட்டில் நீதித்துறைக்கு எதிராக செயற்படுகின்றனரா? ஜனாதிபதியின் சொல்லுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லையா? என்ற கேள்விகள் மக்களிடையே எழுகின்றன.

இதேவேளை அண்மையில் ஆர்ப்பாட்டம் செய்த போது, கச்சேரிக்கு முன்னால் அரசாங்க அதிபரிடம் செல்வதற்குக்கூட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுமதிகள் மறுக்கப்பட்டிருந்தன. அவர்கள் அரசாங்க அதிபரை விட எத்தனையோ மடங்கு உயர்வில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. இது மனித உரிமை மீறலாகும். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை அதிகாரிகளிடம் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் உரிய அதிகாரிகள் அதனை மறுப்பது மனித உரிமை மீறலாகும். அந்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

அங்குள்ள பண்ணையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாங்கம் சரியாக செய்யும் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் வாக்களித்தனர். கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பண்ணையாளர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தனர். ஆனால் அந்த பண்ணையாளர்கள் வெளியில் துரத்தப்பட்டுள்ளனர். இந்த விடயத்தில் அதிகாரிகள் சரியாக கையாள வேண்டும்.

ஜனாதிபதி கூறும் விடயங்களை அதிகாரிகள் சரியாக கையாண்டு செயற்படுத்த வேண்டும். அதனை மறுதளித்து செயற்படுவதற்கு சில கட்சியினர் செயற்படுகின்றனர். நீதிமன்றம் வழங்கும்உத்தரவுகளையும் செயற்படுத்த வேண்டும்.  ஆனால் அதிகாரிகள் ஜனாதிபதியின் மற்றும் நீதித்துறையின் உத்தரவுகளை துஷ்பிரயோகம் செய்பவர்களாக இருக்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24