(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
ஆட்சிக்கு வந்தவுடன் பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுகாதாரம் மீதான வெற் வரியை குறைப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.இரண்டாண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலாவது இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (04) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தேசிய உற்பத்தியாளர்களையும், தேசிய விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையிலும், அவர்களின் தொழிற்றுறையை மேம்படுத்தும் வகையிலும் அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை.நடுத்தர மக்களை பொருளாதார ரீதியில் மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தான் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தேசிய விவசாயத்தை மேம்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.கடந்த அரசாங்கத்தை போன்று இந்த அரசாங்கமும் இறக்குமதியை மாத்திரம் முழுமையாக நம்பியுள்ளது. அரிசி இறக்குமதியாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் சுகாதாரம் மற்றும் பாடசாலை உபரணங்கள் மீதான 18 சதவீத வெற் வரியை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரையில் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பாடசாலை உபகரணங்களின் விலையேற்றத்தால் பெரும்பாலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெற் வரி தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும்.வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிடின் அதனை ஜனாதிபதி பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆட்சிக்கு வருவதற்காக அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமற்ற வகையில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. மக்கள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு தற்போது வலியுறுத்துகிறார்கள்.ஆகவே வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM