குப்புறக் கிடந்த ஆமையை நிமிர்த்தி உதவி செய்த சக ஆமை!  

04 Nov, 2026 | 03:23 PM
image

குப்புறக் கிடந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஓர் ஆமையை இன்னோர் ஆமை பெரும் போராட்டத்துக்கு மத்தியில் நேராக நிமிர்த்தி, உதவி செய்த சம்பவம் சீனாவில் உள்ள மிருகக்காட்சிச் சாலையில் இடம்பெற்றுள்ளது. 

மனிதர்களே பல சமயங்களில் சக மனிதர்களுக்கு உதவ யோசிக்கும் காலகட்டத்தில் விலங்குகளுக்குள்   நிகழ்ந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சீனாவின் நான்ஜிங் நகரில் உள்ள புகழ்பெற்ற 'நான்ஜிங் ஹொங்ஷான் ஃபொரஸ்ட்' (Nanjing Hongshan Forest Zoo) மிருகக்காட்சிச் சாலையில் பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

அங்குள்ள ஆமை அடைப்புப் பகுதியில் இருந்த ஆமையொன்று எதிர்பாராத விதமாக தரையில் குப்புற விழுந்துவிட்டது. காயம் காரணமாகவோ அல்லது நிலைதடுமாறியோ எழ முடியாமல் தவித்த அந்த ஆமை, தனது கால்களை மேல் நோக்கி ஆட்டியபடி மீண்டு வர கடுமையாகப் போராடியது.

இதனைத் தூரத்திலிருந்து கவனித்த மற்றோர் ஆமை, உடனடியாக உதவ முயற்சித்தது.

பொதுவாக ஆமைகளின் அடையாளமே, அவற்றின் மெதுவான நடையாகும். அதேபோல, அந்த ஆமையும் தன் இயல்பான மெதுவான வேகத்திலேயே, குப்புறக் கிடந்த ஆமையை நோக்கி நகர்ந்து சென்றது.

அந்த சக ஆமை, போராடிக்கொண்டிருந்த ஆமையை நிமிர்த்த, தீவிரமாக முயற்சித்தது. தன் பலம் முழுவதையும் திரட்டி, தலையால் முட்டி, தலைகீழாகக் கிடந்த ஆமையை நிமிர்த்த, அதன் கால்களில் நிற்கும் விதமாக புரட்டிப் போட்டது.

ஆமையின் இந்த செயலைக் கண்ட பார்வையாளர்கள் உற்சாகமாக குரல் கொடுத்து வரவேற்றனர். 

ஆமை செய்த உதவி குறித்து மிருகக்காட்சிச் சாலை ஊழியர்கள் கூறுகையில், "விலங்குகள் இயல்பாகவே தங்களுக்குள் உதவிக் கொள்ளும் பழக்கம் உடையவை. எங்களது உதவி தேவைப்பட்டால் நாங்களும் சென்று காப்பாற்றுவோம்" என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குப்புறக் கிடந்த ஆமையை நிமிர்த்தி உதவி...

2026-11-04 15:23:36
news-image

90 வயது ஆணழகன்! ; நம்பிக்கை...

2026-11-02 15:05:23
news-image

இது கரப்பான் பூச்சி ஃப்ரை ;...

2026-10-28 15:53:42
news-image

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ‘தலுக்கு புலுக்கு தக்காளி’...

2026-10-25 17:22:32
news-image

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல்...

2026-10-17 16:47:42
news-image

10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடந்த...

2026-10-15 12:07:28
news-image

காகித விமானங்களை வாயினாலேயே கவ்விப் பிடித்து...

2026-10-14 14:04:50
news-image

விடாமுயற்சிக்கு வயது தடையில்லை: 5 மணி...

2026-10-12 14:10:55
news-image

இன்று வானில் தென்படும் சனியின் ‘எதிர்நிலை...

2026-10-04 16:14:53
news-image

டோக்கியோவில் கலக்கிய ‘பவள மல்லி’: ஜப்பானியர்களிடையே...

2026-10-03 17:55:05
news-image

“Back to the 80s” ட்ரெண்டில்...

2026-09-17 14:52:19
news-image

ரணில் ராஜபக்சக்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்...

2026-09-14 16:05:42