நடிகர் வி ஜே சித்து நடிக்கும் 'டயங்கரம்' படத்தின் டீசர் வெளியீடு

04 Nov, 2026 | 03:03 PM
image

டிஜிட்டல் திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் அறிமுகமான நடிகர் வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'டயங்கரம்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் வி ஜே சித்து இயக்கத்தில் உருவாகி வரும் 'டயங்கரம்' திரைப்படத்தில் வி ஜே சித்து, நட்டி நட்ராஜ், நித்தின் சத்யா, 'whatsapp' மணி, ஹர்ஷத் கான், இளவரசு, காளி வெங்கட், 'ஆதித்யா' கதிர், சுஷ்மிதா ஷெட்டி, இஸ்மத் பானு, ஓ ஏ கே சுந்தர், 'பசங்க' சிவக்குமார், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கொமடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார்.

2027 ஆம் ஆண்டு பொங்கல் விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருப்பதால்... இதற்கு பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பொலிமேரா...

2026-11-10 16:28:21
news-image

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை...

2026-11-10 16:27:29
news-image

அறிமுக நடிகர் தீரன் நடிக்கும் 'வோல்டேஜ்'...

2026-11-10 16:27:07
news-image

நடிகர் நாகார்ஜூனாவின் 'கிங் 100' படத்தில்...

2026-11-10 16:26:34
news-image

விஜய் அண்டனியின் 'அப்பா குட்டி '...

2026-11-10 15:59:28
news-image

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி...

2026-11-09 16:34:53