நடிகர் அர்ஜுன் தாஸ் முதன்மையான கதாபாத்திரத்தில்... கதையை முன் நின்று வழி நடத்திச் செல்லும் அழுத்தமான வேடத்தில்.. முதன்முறையாக காவல்துறையின் கம்பீரமான சீருடை அணிந்து காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் 'ஜான் டோ' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜான் டோ' திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு முஜீப் மஜீத் மற்றும் ஆர்டிஸ்ட் 404 ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சைக்கலாஜிக்கல் க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் ஏ ஜி எஸ் நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' எந்த வகைமையில் திரைப்படங்களை உருவாக்கினாலும் மனித உணர்வுகள் தான் எம்முடைய படைப்புகளில் முதன்மையானதாக இருக்கும். 'ஜான் டோ' ஒரு உளவியல் சார்ந்த குற்ற விசாரணை புலனாய்வு படைப்பு. தமிழகம் மற்றும் கேரள மாநில எல்லை பகுதியில் அமைய பெற்றுள்ள குறிஞ்சி மேடு எனும் மலை பிரதேசத்தில் கதை சம்பவங்கள் நடைபெறுகிறது. இதில் சந்துரு என்ற கேரள காவல்துறை அதிகாரியாக அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். ஒரு இயக்குநருக்கான அசலான அங்கீகாரம் அப்படைப்பை காணும் பார்வையாளர்களிடமிருந்து தான் கிடைக்கும். எனவே எதிர்வரும் 13 ஆம் திகதி படமாளிகையில் வெளியாகும் 'ஜான் டோ' திரைப்படத்தை அனைவரும் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்'' என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM