தயாரிப்பாளர் கண்ணன் ரவி இல்ல திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின்

04 Nov, 2026 | 02:54 PM
image

கண்ணன் ரவி குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான கண்ணன் ரவியின் மகனான தீபக் ரவிக்கும், இந்திய மக்களவை உறுப்பினரான கதிர் ஆனந்த் - சங்கீதா தம்பதியினரின் மகளான கே. செந்தாமரைக்கும் இடையே சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பில் தமிழக முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் குடும்பத்தினருடன் பங்கு பற்றி புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

'இராவணக் கூட்டம்', 'தலைவர் தம்பி தலைமையில்', 'டி என் 2026 தங்க நட்சத்திரம்' ஆகிய திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக உயர்ந்திருக்கும் கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் - தற்போது ஐந்து தமிழ் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இதன் மூலம் தமிழ் திரை உலகில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்திருக்கும் இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான கண்ணன் ரவியின் வாரிசு தீபக் ரவி - கே. செந்தாமரை ஆகியோருக்கு திருமண நிச்சயம் அண்மையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த ஓக்டோபர் மாதம் 31 ஆம் திகதி சென்னையில் திருமண வைபவம் இந்து முறைப்படி சடங்கு சம்பிரதாயங்களுடன் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் திகதியன்று சென்னையில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான தென்னிந்திய திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பங்கு பற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதில் முன்னாள் தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு. க. ஸ்டாலின்- துர்கா ஸ்டாலின்- உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் இந்த திருமண வரவேற்பில் பங்கு பற்றி தம்பதிகளுக்கு மலர் கூடையை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி பாய்'...

2026-11-14 17:17:12
news-image

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் 'செங்குலம்'...

2026-11-14 17:17:02
news-image

நஸ்லென் நடிக்கும் 'பேச்சுலர் பார்ட்டி டீயெக்ஸ்'...

2026-11-14 17:16:07
news-image

தனுஷ்- மம்முட்டி நடிக்கும் 'ஓம்' படத்தின்...

2026-11-14 17:15:00
news-image

நடிகர் எஸ். பி. சித்தார்த் நடிக்கும்...

2026-11-14 16:29:30
news-image

கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் டி...

2026-11-14 16:27:22
news-image

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'ஸ்டேஷன்'...

2026-11-14 16:27:09
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் காளிதாஸ் ஜெயராமின்...

2026-11-14 16:27:00
news-image

புதுமணத் தம்பதிகளான அனிருத் – காவியா...

2026-11-14 16:08:41
news-image

டைட்டானிக் ( காதலும் கவுந்து போகும்)...

2026-11-14 15:49:20
news-image

பிளாக் - Flag - திரைப்பட...

2026-11-14 15:41:56
news-image

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை...

2026-11-13 15:28:17