அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

04 Nov, 2026 | 02:01 PM
image

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இலத்திரனியல் சாதனமான கைப்பேசியை தங்களுடன் வைத்துக்கொண்டு, மனிதர்கள் வயது வித்தியாசம் இன்றி ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

இது அவர்களையும் அறியாமல் உளவியல் சார்ந்த சிக்கலுக்கு ஆளாக்கிக் கொள்கிறார்கள் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும் சிலருக்கு கூட்டமாகவோ அல்லது மக்கள் திரளாகவோ கூடும் இடங்களில் இருந்தாலோ அல்லது அதனை கடக்கும் போதோ விவரிக்க இயலாத பதட்ட உணர்வு அவர்களுக்குள் எழுகிறது. இதனை உளவியல் நிபுணர்கள் அகோராஃபோபியா என மருத்துவ மொழியில் குறிப்பிட்டு, இதற்கு ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டியதிருக்கும் என அறிவுறுத்துகிறார்கள்.

அகோராஃபோபியா என்பது ஒரு வகையிலான பதட்டத்தால் ஏற்படும் உளவியல் சார்ந்த குறைபாடு ஆகும். இத்தகைய தருணத்தில் கூட்டத்தில் உதவி இல்லாமல் தனித்து சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு மேலோங்கும். இதனால் அந்த சூழலை கண்டு அச்சமடைவார்கள். அதனை உடனடியாக தவிர்க்கவே அவர்கள் விரும்புவார்கள். இதன் காரணமாகவே எம்மில் பலரும் பொது போக்குவரத்தை பாதிப்பதை தவிர்த்து விடுவர். வேறு சிலர் வணிக வளாகங்களிலோ அல்லது வைத்திய சாலையிலோ அல்லது மூடிய உள்ளரங்குகளிலோ வரிசையில் நிற்பதற்கும்... கூட்டமாக இருக்கும் இடத்தில் நிற்பதற்கும் ...மனதளவில் அச்சமடைவார்கள்.

சிலருக்கு இத்தகைய சூழலில் எதிர்பாரா விதமாக சிக்கிக் கொண்டால்... சில வினாடிகளிலேயே அங்கிருந்து உடனடியாக வெளியே சென்று விட வேண்டும் எனும் உணர்வெழுச்சி மேலோங்கும். அதிலும் பழக்கமற்ற புதிய நிலவியல் சூழலை இவர்கள் எதிர்கொள்ளும் போது அல்லது அதனை கடந்து செல்லும்போது இத்தகைய அச்ச உணர்வு அதிகமாக எழும்.

சிலர் இதுபோன்ற பொது இடங்களில் பதட்டம் சார்ந்த உளவியல் கோளாறுகளுக்கு ஆளாகும் போது தலைசுற்றல், மயக்கம், கீழே விழுதல், சிறுநீர் கழித்தல், வயிற்றுப்போக்கு, விவரிக்க இயலாத சங்கடங்கள், வியர்த்தல் போன்ற அறிகுறிகள் உண்டாகும். சிலருக்கு இதனுடன் சேர்ந்து பானிக் டிஸ்ஆர்டர் ( Panic Disorder) எனப்படும் பீதியின் தாக்குதலுக்கும் ஆளாகுவார்கள். சிலருக்கு இவை சில நிமிடங்கள் வரை நீடித்து அவர்களது உடல் இயக்கத்தை முடக்கி மாரடைப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் கருத கூடும்.

உடல் நல கோளாறு- மரபியல் காரணி- உளவியல் மேலாண்மையில் ஆளுமை இன்மை- மன அழுத்தம்- கற்பிதங்கள்-  என பல காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இதற்கு வைத்தியர்கள் உளவியல் ஆலோசனை- கலந்துரையாடல் -மருந்தியல் சிகிச்சை- ஆகியவற்றை வழங்கி நிவாரணம் அளிக்கிறார்கள்.

வைத்தியர் ராஜ் மோகன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெல்விக் அசிடபுலர் ஃப்ராக்சர் எனும் இடுப்பு...

2026-11-11 16:42:12
news-image

ஸ்போண்டிலோஸிஸ்டெசிஸ் எனும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும்...

2026-11-10 15:59:08
news-image

நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-11-07 16:35:21
news-image

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனும் இதய தசை...

2026-11-06 18:17:18
news-image

பித்தப்பை சுவர் சிதைவு நோய் பாதிப்பிற்கான...

2026-11-05 16:52:08
news-image

அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

2026-11-04 14:01:10
news-image

கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை...

2026-11-03 14:47:47
news-image

வாஸ்குலர் ரிங் எனும் பிறவி இதயக்...

2026-11-02 13:47:27
news-image

கான்ட்ராஸ்ட் இன்டீயூஸ்டு கிட்னி இன்ஜுரி எனும்...

2026-10-31 14:40:04
news-image

டிரான்சியன்ட் இஸ்கிமீக் அட்டாக் எனும் தொடக்க...

2026-10-30 16:33:06
news-image

குரல் நாண் பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும்...

2026-10-28 15:06:37
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பை...

2026-10-27 14:59:16