(நெவில் அன்தனி)
பங்களாதேஷின் டாக்காவில் நடைபெறவுள்ள 15ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு 28 வீரர்களைக் கொhண்ட இலங்கை குழாத்தை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
ஆறு நாடுகள் பங்குபற்றும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப்பில் வரவேற்பு நாடான பங்களாதேஷ், பூட்டான், இலங்கை ஆகியன பி குழுவிலும் நடப்பு சம்பியன் இந்தியா, மாலைதீவுகள், பாகிஸ்தான் ஆகியன ஏ குழுவிலும் விளையாடவுள்ளன.
தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப்பின் ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷும் பூட்டானும் டாக்கா தேசிய விளையாட்டரங்கில் நாளை வியாழக்கிழமை (05) மோதவுள்ளன.
அப் போட்டியைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஏ குழு போட்டி நடைபெறும்.
இலங்கை தனது முதலாவது போட்டியில் பூட்டானை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷை 11ஆம் திகதி புதன்கிழமையும் எதிர்த்தாடும்.
தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பை முன்னிட்டு பலம்வாய்ந்த இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குழாம்
சுஜான் பெரேரா (தலைவர்), கவீஷ் பெர்னான்டோ, மொஹமத் முர்சித், மொஹம்மத் ஹஸ்மீர், முஹம்மத் முன்சிவ், சலன சமீர, செபமாலைநாயகம் ஜூட் சுபன், ஜேசன் தயாபரன், ஜெரமி பெரேரா, வில்லியம் தோமாசன், அனுஜன் ராஜேந்திரம், குளோடியோ கெமனெச், பாரத் சுரேஷ், ஸ்டீவன் சகாயராஜி, லியொன் பெரேரா, ஆதவன் ராஜமோகன், கெரத் கெலி, நிலோஷான் செந்தூர்வாசன், ஒலிவர் கெலாட், டிலொன் டி சில்வா, செமுவல் டுரன்ட், வசீம் ராஸீக், வேட் டெக்கர், ராகுல் சுரேஷ் முத்துக்குமாரு ரேமியன், அய்மான் ஸவாஹிர், ரெஜிஸ் கெனிஸ்டன், அமான் பைஸர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM