தமிழ் இலக்கிய தளத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது தனித்துவமிக்க எழுத்து நடை மற்றும் நவீனக் கதையாடல்களால் ஆழமான தடம் பதித்த மூத்த எழுத்தாளர் இரா. முருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை (3) காலமானார்.
இவர் ‘கணையாழி’ இதழில் வெளியான தனது முதல் புதுக்கவிதை மூலம் 1977ஆம் ஆண்டு எழுத்துலகிற்கு அறிமுகமானார். இவருடைய தொடக்க காலக் கவிதைகள் பிரபல எழுத்தாளர் சுஜாதாவால் பெரிதும் பாராட்டப்பட்டன.
ஆரம்பத்தில் கவிஞராக அறியப்பட்ட இவர், பின்னர் நாவல், சிறுகதை, கட்டுரை, மேடை நாடகம் மற்றும் திரைப்பட வசனம் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களைப் படைத்து எழுத்துத்துறைக்கு பெரும் பங்காற்றினார்.
எழுத்தாளர் இரா. முருகனின் படைப்புகளில் “மூன்று விரல்” (மென்பொருள் துறை சார்ந்த இவரது முதல் நாவல்), “அரசூர் வம்சம்”, “விஸ்வரூபம்”, “அச்சுதம் கேசவம்”, “வாழ்ந்து போதீரே” போன்றவை குறிப்பிடத்தக்கதாகும்.
இவரது ‘அரசூர் வம்சம்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘தி கோஸ்ட்ஸ் ஆஃப் அரசூர்’, கிராஸ்வேர்ட் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது.
மேலும் இவர் கதா விருது, பாரதியார் பல்கலைக்கழக விருது, 2024ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது, இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களை பெற்றுள்ளார்.
மலையாளத்தில் இருந்து கதைகளை மொழியாக்கம் செய்துள்ளார். என்.எஸ்.மாதவனின் 'லண்டன் பத்தேரியிலே லுத்தீனியகள்' என்னும் நாவலை 'பீரங்கிப் பாடல்கள்' என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். ஆங்கிலத்தில் இருந்து அருண் கொலாட்கரின் அனைத்துக் கவிதைகளையும் மொழிபெயர்த்தார்.
இரா.முருகன் திரைப்படத்துறையில் தடம் பதித்த இவர், கமல் ஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ (2009) திரைப்படத்துக்காகவும் மற்றும் அஜீத் குமார் நடித்த “பில்லா 2” (2011) திரைப்படத்திற்காகவும் வசனம் எழுதியுள்ளார்.
இரா. முருகன் எழுதிய 'நெம்பர் 40, ரெட்டைத் தெரு' அடிப்படையில் உருவாக்கப்பட்ட 'ரெட்டைத் தெரு' (2010) குறும்படத்தில் நடிகராகவும் திரையில் தோன்றியிருக்கிறார்.
இந்திய ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பிரபலமான தமிழக வீரர் அஸ்வின் முருகன் இவரது மகன் ஆவார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM