இலங்­கையின் கிரிக்கெட் இவ்­வா­றான நிலையில் இருந்தால் 2019 உலகக் கிண்ணத் தொடரில் நாம் வெற்­றி­பெ­று­வது கடினம் என்று முன்னாள் தலை­வரும் அமைச்­ச­ரு­மான அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார். 

எதிர்­வரும் போட்­டி­களில் இலங்கை அணி வெற்றி பெறும் என்று எதிர்வு கூற­மு­டி­யாது. இந்­தி­யா­வுக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள தொடரில் இலங்கை அணி வெற்­றி­பெ­று­வதும் கடி­ன­மாக இருக்கும். 

விளை­யாட்டு வீரர்­களை குறை­கூ­று­வ­தற்கு ஒன்­று­மில்லை அவர்­க­ளிடம் நல்ல திற­மை­யுள்­ளது. ஆனால் கிரிக்­கெட்டை நிர்­வ­கிக்க முடி­யாத நிர்­வா­கமே இன்று காணப்­ப­டு­கின்­றது. 

நான் கிரிக்கெட் பற்றி கூறி­யவை சரி­யாக நடந்­துள்­ளன. அத­னால்தான் எமது நாட்டு அணி இப்­ப­டியே இருந்தால் உலகக் கிண்ணத் தொடரில் எதை சா­திப்போம் என்று சொல்­ல­மு­டி­யாது. 

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான டெஸ்ட் போட்­டி­களில் வெற்­றி­பெற்­றது தொடர்­பாக மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். 

வீரர்­க­ளிடம் எந்­தப்­பி­ரச்­சி­னையும் இல்லை. வீரர்­களின் மன­நி­லையை சரிசெய்து நாட்டுக்காக விளையாடவைத்தால் வெற்றி பெறுவது உறுதி என்று அமைச்சர் தெரிவித்தார்.