அவுஸ்திரேலியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு விசேட தற்காலிகப் போக்குவரத்துத் திட்டம் நாளை (02) அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை காலை 7 மணி முதல் பேஸ்லைன் வீதி, ஹோர்ட்டன் ப்ளேஸ், கொள்ளுப்பிட்டி, காலி முகத் திடல் ஆகிய பகுதிகளின் வீதிப் போக்குவரத்தில் தற்காலிக மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழியாகப் பயணிப்பவர்கள் இந்த மாற்றங்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.