பங்களாதேஷின் டாக்கா தேசிய விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (5) ஆரம்பமாகவுள்ள 6 நாடுகளுக்கு இடையிலான 15ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டியில் சம்பியனாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இலங்கை கால்பந்தாட்ட அணி இன்று (3) அதிகாலை இங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
இலங்கை கால்பந்தாட்டக் குழாத்தில் இடம்பெறும் ஒரு சில வீரர்களைத் தவிர்ந்த ஏனைய வீரர்களுடன் பயிற்றுநர், உதவி பயிற்றுநர்கள், உதவியாளர்கள் டாக்கா பயணமானார்கள்.

தெற்காசிய பிராந்தியத்தின் 'மினி உலகக் கிண்ணம்' என வருணிக்கப்படும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் (SAFF CHAMPIONSHIP), வரவேற்பு நாடான பங்களாதேஷுக்கும் பூட்டானுக்கும் இடையிலான போட்டியுடன் வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.
இதே தினத்தன்று இந்தியாவும் பாகிஸ்தானும் ஏ குழுவுக்கான போட்டியில் பங்குபற்றுகின்றன. இக்குழுவில் மூன்றாவது அணியாக மாலைதீவுகள் இடம்பெறுகின்றது.
பி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது முதலாவது போட்டியில் பூட்டானை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (8) எதிர்த்தாடவுள்ளதுடன் பங்களாதேஷை 11ஆம் திகதி சந்திக்கவுள்ளது.
இம்முறை சாஃப் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அதிசிறந்த பெறுபேறுகளை ஈட்டும் என தலைமைப் பயிற்றுநர் அப்துல்லா அல் முத்தெய்ரியும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமரும் நம்பிக்கை வெளியிட்டனர்.

இலங்கை குழாம் (பெரும்பாலும்)
கோல் காப்பாளர்கள்: சுஜான் பெரேரா, கவீஷ் லக்ப்ரிய பெர்னாண்டோ, மொஹம்மத் முர்சித், அஹ்மத் ஷெரீவ்; பின்கள வீரர்கள் : ஜேசன் தயாபரன், குளோடியோ கமநெச், ஸாஹி அத்திஸ், அனுஜன் ராஜேந்திரம், வில்லியம் தோமாசன், மொஹமத் ஹமர், ஸ்டீவன் சகாயராஜி, செபமாலைநாயகம் ஜூட் சுபன், சலன சமீர; மத்திய கள வீரர்கள்: லியோன் பெரேரா, கரெத் கெலி, நிலோஷன் செந்தூர்வாசன், ஆதவன் ராஜமோகன், பரத் சுரேஷ், நோஆ கருணாரட்ன, மொஹம்மது முன்சிவ்; முன்கள வீரர்கள்: டிலொன் டி சில்வா, சாம் டுரன்ட், ஒலிவர் கெலாட், வசீம் ராஸீக், வேட் டெக்கர், ராகுல் சுரேஷ்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM