அமீர், கரு.பழனியப்பன் வாழ்த்துகளுடன் வெளியான 'ஜெடூசி' டீசர்

Published By: Digital Desk 2

03 Nov, 2026 | 02:53 PM
image

நடிகர் ஸ்ரீதர் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜெடூசி' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தமிழ் திரையுலகின் சாதனை படைத்த இயக்குநர்களான அமீர்- கரு பழனியப்பன் ஆகியோர் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் நட்ராஜ் ஏகாம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெடூசி' திரைப்படத்தில் ஸ்ரீதர், ஸ்வேதா, 'அருவி' மதன், ஏ. வெங்கடேஷ், பிளாக் பாண்டி, பவா செல்லதுரை, அசோக் பாண்டியன், ஜெயந்திமாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வி. எஸ். நாகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்னேஸ்வரன் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அக்ஷயா மூவி மேக்கர்ஸ் மற்றும் ஸ்ரீ இன்டர்நேஷனல் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நட்ராஜ் ஏகாம்பரம் மற்றும் விஜயசாந்தி ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. இதன் காரணமாக இந்த டீசருக்கு இணையவாசிகளிடம் பேராதரவு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஜய் சேதுபதியின் 'இஞ்சி வெல்லம்' படத்தின்...

2026-11-12 15:43:17
news-image

ஆங்கில புத்தாண்டு நாளில் மீண்டும் வெளியாகிறது...

2026-11-12 15:42:06
news-image

200 கோடி ரூபாய் வசூல் கிளப்பில்...

2026-11-12 15:35:58
news-image

யோகி பாபு நடிக்கும் 'ஆன் ஆர்டினரி...

2026-11-12 15:10:29
news-image

காதலனை கரம்பிடித்த நடிகை பிரியா பவானி...

2026-11-12 12:24:45
news-image

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்றது அனிருத் -...

2026-11-12 11:11:46
news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55