பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகை ராஷ்மிகா மந்தனா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மைசா' திரைப்படத்தில் இடம் பெற்ற 'தாயே தாயே ஐஷீ..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகியுள்ள 'மைசா' திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், கார்த்திக் ரஞ்சனி, நிதி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.
கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அன்பார்முலா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அஜய்- அணில் & வீரா சாய் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற 'தாயே தாயே ஐஷீ ஐஷீ' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகி குமார வேக்தேவி பாடியிருக்கிறார். கிராம தேவதையை அதற்குரிய சடங்கு சம்பிரதாயங்களுடன் வழிபடும் கூட்டத்தைப் பற்றிய விவரண பாடலாகவும், ஆன்மீக உணர்வை எழுப்பும் பாடலாகவும் அமைந்திருப்பதால், இந்த பாடலுக்கு திரையிசை ரசிகர்களை தவிர்த்து பக்தி பாடல்களை ரசிக்கும் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM