கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை - சலைன் இன்ஃப்யூசன் சோனோகிராபி

Published By: Digital Desk 2

03 Nov, 2026 | 02:47 PM
image

திருமணமான பிறகு பெண்மணிகள் கருவுறுதல் தொடர்பான பரிசோதனைகளின்போது, தற்போது வைத்தியர்கள் சலைன் இன்ஃப்யூசன் சோனோகிராபி எனும் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். இது ஏன் அவசியம் என்பதை வைத்தியர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.

இன்றைய திகதியில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட திருமணமான தம்பதிகள் செயன்முறை கருத்தரிப்பின் மூலம் கருவுறுதல் சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.

சிலருக்கு இதில் முதன்முறையாக தோல்வி அடைந்த பிறகு வைத்தியர்கள் அவர்களுக்கு எஸ்.ஐ.எஸ். என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் சலைன் இன்ஃப்யூசன் சோனோகிராபி எனும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள்.

இத்தகைய பரிசோதனையின் போது உள்ளே செலுத்தப்படும் பிரத்யேக திரவம் - கருப்பையகம்-  கருப்பைக் குழி ஆகியவற்றில் துல்லியமாக ஆராய்ந்து அதில் ஏதேனும் சிறிய அளவிலான பாதிப்புகள் இருந்தால், அதனை கண்டறிகிறது.‌

இந்த பரிசோதனை ஏனைய டிரான்ஸ்வஜைனல் ஸ்கேன் மற்றும் ஹிஸ்டரோசல்பிங்கோகிராம் ஆகிய பரிசோதனைகளை விட நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால்,  அந்த பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்படாத பாதிப்புகளை இத்தகைய பரிசோதனையின் போது துல்லியமாக கண்டறிய முடிகிறது.

இதன் காரணமாக கருவுறுதல் தொடர்பான பெண்களின் சந்தேகங்களுக்கும் செயன்முறை கருத்தரிப்பு சிகிச்சையில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தையும் கண்டறிய முடிவதால் இதற்கு தற்போது பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

வைத்தியர் சாக்ஷி

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெல்விக் அசிடபுலர் ஃப்ராக்சர் எனும் இடுப்பு...

2026-11-11 16:42:12
news-image

ஸ்போண்டிலோஸிஸ்டெசிஸ் எனும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும்...

2026-11-10 15:59:08
news-image

நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-11-07 16:35:21
news-image

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனும் இதய தசை...

2026-11-06 18:17:18
news-image

பித்தப்பை சுவர் சிதைவு நோய் பாதிப்பிற்கான...

2026-11-05 16:52:08
news-image

அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

2026-11-04 14:01:10
news-image

கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை...

2026-11-03 14:47:47
news-image

வாஸ்குலர் ரிங் எனும் பிறவி இதயக்...

2026-11-02 13:47:27
news-image

கான்ட்ராஸ்ட் இன்டீயூஸ்டு கிட்னி இன்ஜுரி எனும்...

2026-10-31 14:40:04
news-image

டிரான்சியன்ட் இஸ்கிமீக் அட்டாக் எனும் தொடக்க...

2026-10-30 16:33:06
news-image

குரல் நாண் பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும்...

2026-10-28 15:06:37
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பை...

2026-10-27 14:59:16