கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி மகோற்சவம்

Published By: Digital Desk 2

03 Nov, 2026 | 02:04 PM
image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த கந்தசஷ்டி மகோற்சவம் எதிர்வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை 7 மணிக்கு விரததாரர்களுக்குத் தர்ப்பை அணிவிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன், தொடர்ந்து திருச்செந்தூர் புராணம் படிக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு உச்சிக்காலப் பூஜையுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடையும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சூரன்போர் நிகழ்வு நடைபெறவுள்ளது.

மகோற்சவ காலத்தில் தினமும் காலை 5.30 மணிக்கு மூலவருக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெறுவதுடன், மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தில் அலங்காரச் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளது.

மேலும், சுவாமி எழுந்தருளி, தினமும் ஒவ்வொரு கவசம் படிக்கப்பட்டு உள்வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32
news-image

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப்...

2026-11-03 11:12:25
news-image

தேசிய தீபாவளி நிகழ்வு 2026 –...

2026-11-03 09:57:46
news-image

நாச்சம்மை சிவசந்தோஷி வைரவனின் 'சண்மார்க்கம்' அரங்கேற்றம்

2026-11-02 18:56:51
news-image

தீபாவளி நன்னாளில் இலங்கைக்காக ஒரு விளக்கேற்றுங்கள்!

2026-11-02 11:54:35
news-image

"வித்யா பாரதி கலா சேவா” விருது...

2026-11-01 16:06:48