சர்ச்சைக்குரிய சைட்டம் மருத்துவக் கல்லூரி பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருக்கும் முடிவுகளைத் தாம் ஏற்றுக்கொள்வதாக அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர். 

உபவேந்தர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் முடிவுகளை பரிசீலனை செய்ததில் அவை ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நேர்மறையானதும் ஆக்கபூர்வமானதுமாகக் காணப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தீர்மானங்கள் அரச பல்கலைக்கழக மாணவர்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அமைந்திருப்பதால், இனியும் தாமதிக்காமல் உடனடியாக மாணவர்கள் தத்தம் கற்றல் செயற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.