உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஜனவரி மாதம் 20ஆம் 30ஆம் திகதிகளுக்குள் நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக உள்ளூராட்சித் தேர்தல்கள் திகதி குறித்து இழுபறி நிலை காணப்பட்டது.

ஜனவரி மாதம் தேர்தல்கள் நடத்தப்படும் என நம்பப்பட்டபோதும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் அத்தகவல்கள் முக்கியத்துவம் அற்றவையாகவே காணப்பட்டன.

இந்நிலையில், தேர்தல் தினம் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஃபைஸர் முஸ்தபா இன்று கையெழுத்திட்டுள்ளதைத் தொடர்ந்தே ஜனவரியில் தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.