19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண கிரிக்கெட்; இலங்கை கனிஷ்ட அணி ஓமான் பயணமானது

Published By: Digital Desk 2

03 Nov, 2026 | 09:02 AM
image

(நெவில் அன்தனி)

ஓமானில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள 8 நாடுகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் இலங்கை கனிஷ்ட அணியினர், இன்று (03) பிற்பகல் ஒமான் நோக்கி பயணமாகினர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் நடைபெற்ற சர்வமத அனுஷ்டானங்களுக்கு பின்னர் இலங்கை கனிஷ்ட அணியினர் புறப்பட்டுச் சென்றனர்.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்போது மருதானை புனித சூசையப்பர் கல்லூரி அணிக்காக விளையாடி வருபவருமான விக்னேஸ்வரன் ஆகாஷ் பிரதான சுழல்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இலங்கை கனிஷ்ட அணியில்    இடம்பெறுகிறார்.

இலங்கையின் 17 வயதுக்குட்ட அணியில் விளையாடி வந்த இவர் அதனைத் தொடர்ந்து இந்த வருட முற்பகுதியில் நைரோபி மற்றும் ஸிம்பாப்வேயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி இருந்தார்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு மாத்தறை சென் செர்வேஷியஸ் கல்லூரி வீரர் விரான் சமுதித்த அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் ஜப்பானுக்கு எதிராக சாதனைமிகு 192 ஓட்டங்களைக் குவித்து கண்டி திரித்துவ கல்லூரியின் முன்னாள் வீரர் ஹசித்த போயகொட கென்யாவுக்கு எதிராக 2018இல் குவித்த 191 ஓட்டங்களைக் கடந்து புதிய சாதனை நிலைநாட்டியிருந்தார்.

'இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அணியில் இடம்பெற்ற சில வீரர்கள் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்துக்கான இலங்கை அணியில் இடம்பெறுவது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைகிறது. நான் உட்பட மேலும் 3 வீரர்கள் உலகக் கிண்ணத்தில் விளையாடி இருந்தனர். அவர்களுடன் புதிதாக 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெறும் வீரர்கள் அனைவரும் பாடசாலை கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர். எனவே 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணப் போட்டியில் நாங்கள் திறமையாக விளையாடி வெற்றிபெற முயற்சிப்போம்' என அணித் தலைவர் விரான் சமுதித்த இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் தெரிவித்தார்.

விரான் சமுதித்த, உப தலைவர் சேனுஜ வேக்குனாகோட, விக்னேஸ்வரன் ஆகாஷ், செத்மிக்க செனவிரட்ன ஆகிய நால்வரே உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியவர்களாவர்.

ஓமானின் அல் அமிரத் நகரில் அமைந்துள்ள மாநகர சபைக்கு சொந்தமான இரண்டு மைதானங்களில் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

பி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் மலேசியாவை நவம்பர் 5ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

தொடர்ந்து பங்களாதேஷ் அணியை நவம்பர் 7ஆம் திகதியும் ஆப்கானிஸ்தானை நவம்பர் 9ஆம் தகதியும் சந்திக்கும்.

ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம் ஆகிய அணிகள் விளையாடவுள்ளன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

அரை இறுதிப் போட்டிகள் நவம்பர் 12ஆம் திகதியும் இறுதிப் போட்டி நவம்பர் 14ஆம் திகதியும் நடைபெறும்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம்

விரான் சமுதித்த (தலைவர், மாத்தறை சென் செர்வெஷியஸ் கல்லூரி), சேனுஜ வேக்குனாகொட, விக்னேஸ்வரன் ஆகாஷ் (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ரெஹான் பீரிஸ், ஹிமரு தேஷான் (இருவரும் கொழும்பு றோயல் கல்லூரி), கௌஷிக்க குமாரசிங்க (கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரி, சனிரு சேனாரட்ன, செத்மிக்க செனவிரட்ன (இருவரும் கண்டி திரித்துவ கல்லூரி), கிஹான் மெண்டிஸ், ஸ்டெவொன் பீரிஸ் (இருவரும் கல்கிஸ்ஸை சென். தோமஸ் கல்லூரி), கித்ம வித்தானபத்திரண (கொழும்பு ஆனந்த கல்லூரி), கிம்ஹான் ரசஞ்சன (ரத்கமை தேவபத்திராஜ ம.ம.வி.), லதேந்த் ஆகாஷ் (ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல கல்லூரி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான...

2026-11-10 00:21:02
news-image

'இறுதிப் போட்டியில் பங்களாதேஷும் இந்தியாவும் விளையாடட்டும்'...

2026-11-10 00:18:22
news-image

கொமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2026

2026-11-09 19:17:14
news-image

சாவ் சம்பின்ஷிப்பில் பூட்டானுக்கு எதிரான போட்டியில்...

2026-11-08 22:18:41
news-image

19இன் கீழ் ஆடவர் ஆசிய கிண்ண...

2026-11-06 20:56:55
news-image

குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட 3 நாள்...

2026-11-06 19:27:40
news-image

இளையோர் ஒலிம்பிக் ஆண்களுக்கான 200 மீற்றர்...

2026-11-06 18:12:26
news-image

இந்தியா – இலங்கை ஒருநாள் கிரிக்கெட்...

2026-11-06 09:30:30
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-11-06 03:58:54
news-image

SAFF சம்பியன்ஷிப் 2026: பூட்டானுடனான பரபரப்பான...

2026-11-06 03:56:15
news-image

17 இன் கீழ் ஆசிய கிண்ண...

2026-11-06 03:53:01
news-image

ஐந்து கோல்கள் அடிக்கப்பட்ட பரபரப்பான ஆட்டத்தில்...

2026-11-06 11:11:23