நாச்சம்மை சிவசந்தோஷி வைரவனின் 'சண்மார்க்கம்' அரங்கேற்றம்

02 Nov, 2026 | 06:56 PM
image

நாச்சம்மை சிவசந்தோஷி வைரவனின் 'சண்மார்க்கம்' பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கலாசார மையத்தில் (NUS University Cultural Centre) நடைபெற்றது.

மார்க்கம் வடிவில் அமைந்த இந்நிகழ்ச்சியில் அஷ்டபதி, வர்ணம், தில்லானா உட்பட எட்டு உருப்படிகள் ஆடப்பட்டன.

நாச்சம்மை சிவசந்தோஷி வைரவன் பீஜ் அகடமியின் (Beej Academy) திருவாட்டி கீர்த்தி ஐயரிடம் நடனம் பயின்று வருகிறார். 

மிருதங்கத்தில் ரமணன், வயலினில் ஸ்ரீ வித்யா ஸ்ரீராம், புல்லாங்குழலில் சரவணன், வாய்ப்பாட்டில் அதிதி கோபிநாத் ஆகியோர் பக்கவாத்திய மற்றும் இசைப் பங்களிப்பு  வழங்கினர்.

இந்த பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் பல பிரமுகர்களும் கலைஞர்களும்  கலந்துகொண்டனர்.

மூத்த பரதநாட்டியக் கலைஞரும், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக்கழகத்தின்  (Singapore Indian Fine Arts Society) பரதநாட்டிய மூத்த ஆலோசகருமான ஸ்ரீமதி சீதாரவம்மா சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், பிள்ளைகள் ஏதேனும் ஒரு கலையைக் கற்பது அவர்களின் நற்பண்புகளை வளர்க்கும் என்று வலியுறுத்தினார்.

21 வயதான நாச்சம்மை, தற்போது சிங்கப்பூர் நிர்வாகக் கழகத்தில் (Singapore Institute of Management – SIM) உளவியல் (Psychology) இளங்கலைப் பட்டப்படிப்பை கற்று வருகிறார்.

ஏழு வயதில், கலாபீடத்தில் (Kalapeetam) ஸ்ரீமதி சீதாரவம்மா சந்திரசேகரனிடம் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். அவரது முதல் குருவே அரங்கேற்றத்தின் சிறப்பு விருந்தினராக வருகையளித்தது குறிப்பிடத்தக்கது. 

பத்து வயதில், ஆலாபனாவில் (Alapana) வித்துஷி அங்கிதா பிரஜ்வலிடம் தொடர்ந்து பயின்றார். 

2020 முதல் திருவாட்டி கீர்த்தி ஐயரிடம் நாட்டியம் பயின்று வருகிறார்.

2023இல் அவரது சலங்கை பூஜை (Salangai Poojai) நடைபெற்றது. 

அதன் பின்னர், கலாசார, சமூக, இளையர் அமைச்சின் (MCCY) ஹார்மனிஃபெஸ்ட் (HarmonyFest), சிண்டாவின் (SINDA) ப்ரொஜெக்ட் கிவ் (Project Give), மக்கள் கழகத்தின் (People's Association) நற்பணி கார்னிவல் (Narpani Carnival), மெகா இந்தியா எக்ஸ்போ (Mega India Expo) ஆகிய நிகழ்ச்சிகளிலும், நவராத்திரி, வசந்த உற்சவம், மண்டலாபிஷேகம் ஆகிய விழாக்களின்போது சிங்கப்பூரின் பல ஆலயங்களிலும் அவர் நடனமாடியுள்ளார்.

2025 இஸ்தானா (Istana) தீபாவளி திறந்த இல்ல (Open House) நிகழ்ச்சியில், சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம்  முன்னிலையில் நடனமாடியது நாச்சம்மைக்குக் கிடைத்த பெரும் பேறாக கருதப்படுகிறது.

இந்தியாவில் தமிழ் இசைச் சங்கத்தின் 2025 மார்கழி இசை நிகழ்ச்சியிலும், இவ்வாண்டு தொடக்கத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் உள்ள குன்றத்துக் குமரன் ஆலயத்திலும் அவர் நடனமாடியுள்ளார்.

பாரம்பரியக் கோலக் கலையில் ஆர்வம் கொண்ட நாச்சம்மை, தமது கோலங்களைக் கருப்பொருள் அடிப்படையிலான (thematic) கலைப்படைப்புகளாகக் காட்சிப்படுத்தி வருகிறார்.

2026–2027 கல்வியாண்டுக்கான SIM உளவியல் சங்கத்தின் (SIM Psychology Society) பொதுச் செயலாளராகவும் (General Secretary) அவர் தற்போது பொறுப்பு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32
news-image

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப்...

2026-11-03 11:12:25
news-image

தேசிய தீபாவளி நிகழ்வு 2026 –...

2026-11-03 09:57:46
news-image

நாச்சம்மை சிவசந்தோஷி வைரவனின் 'சண்மார்க்கம்' அரங்கேற்றம்

2026-11-02 18:56:51
news-image

தீபாவளி நன்னாளில் இலங்கைக்காக ஒரு விளக்கேற்றுங்கள்!

2026-11-02 11:54:35
news-image

"வித்யா பாரதி கலா சேவா” விருது...

2026-11-01 16:06:48