முழுக் குடும்பத்துக்குமான பிரத்தியேகமான சொப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில், இலங்கையின் முன்னணி நவநாகரீக ஆடைகள் விற்பனையாக திகழும் நோக்குடன் இயங்கி வரும் The Outlet Store வருட இறுதி சொப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் தன்னை தயார்ப்படுத்தியுள்ளது.
இதன் பிரகாரம் மொத்த கட்டணப்பட்டியல் பெறுமதியில் 50 சதவீதம் வரை விலைக்கழிவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.
இந்த ஆண்டின் முற்பகுதியில் நிறுவப்பட்ட The Outlet Store, சகல சொப்பிங் பிரிவுகளிலும் அதிகரித்த ஈடுபாடு மற்றும் தன்னிறைவையும் எய்தியுள்ளது. கொழும்பில் காணப்படும் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்த ஆடைகள் விற்பனையகமாக அமைந்துள்ளது.
தனது தெரிவுகளில் புதிய உள்ளடக்கங்களை அறிமுகம் செய்துள்ளதுடன், வாடிக்கையாளர்கள் எப்போதும் ஏதேனும் புதிய பொருளை கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வியப்பூட்டும் 15000 சதுர அடி சொப்பிங் இடவசதியை கொண்டுள்ளதுடன், ஒரு ஆடை விற்பனையகம் என்பதை விட, ஆடை விற்பனைத்தொகுதி என அழைக்கப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
இதில் உயர் தரம் வாய்ந்தரூபவ் நீடித்து உழைக்கும் மற்றும் சகாயமான உள்நாட்டு மற்றும் சர்வதேச நவநாகரீக ஆடைகள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக காணப்படுகின்றன. மேலும், இதில் இல்லங்களுக்கு வழங்கக்கூடிய அன்பளிப்புகள், அணிகலன்கள், ஃபேர்ஃபியும் வகைகள், அழகுசாதனப்பொருட்கள், கைக்கடிகாரங்கள்,விளையாட்டுப்பொருட்கள், பாதணிகள், ஆபரணங்கள் போன்றனவும் உள்ளடங்கியுள்ளன.
The Outlet Store குளோதிங் பிரைவட் லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர் ஷர்ஹான் மன்சூர் கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு விலைக்கழிவுகளை வழங்க முடிந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மொத்தக்கட்டணப்பட்டியல் பெறுமதியில் 50 சதவீதம் வரை கழிவை பெறலாம். இந்த தடவை நாம் பெருமளவு தெரிவுகளை சகல பிரிவுகளிலும் அறிமுகம் செய்துள்ளோம். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் சொப்பிங் செய்வதை காண்பதையிட்டு நாம் திருப்தியடைகிறோம்” என்றார்.
The Outlet Store போதியளவு வாகன தரிப்பிட வசதிகள் காணப்படுவதுடன், ஒரே நேரத்தில் சுமார் 30 வாகனங்களை தரித்துவைத்திருக்கக்கூடிய இடவசதியை கொண்டுள்ளது. கண்கவர் உள்ளக வடிவமைப்பு மற்றும் சர்வதேச சொப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் The Outlet Store பிரத்தியேகமான மற்றும் உயர்தர தெரிவுகளை முழுக்குடும்பத்துக்கும் வழங்குகிறது.
அண்மையில் தனது வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்வூட்டும் வகையிலமைந்த தனது சிற்றுண்டி பகுதியான ‘Brew Bar’ ஐ அறிமுகம் செய்திருந்தது. தமக்கு பிடித்த ஆடைகளையும் இதர அழகுசாதனப்பொருட்களை தெரிவு செய்யும் போது தமக்கு புத்துணர்ச்சியை சேர்த்துக்கொள்ளும் வகையில் இந்த சிற்றுண்டி பகுதி அமைந்திருக்கும். இதில் குளிர் பான வகைத்தெரிவுகள், brownies, cupcakes, deserts, items in jars, snacks போன்ற பல வகைகள் அடங்கியிருக்கும்.
புதிய தெரிவுகள் மற்றும் நவநாகரீக அலங்காரங்களை கொண்டுள்ளதன் காரணமாக, அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்த சொப்பிங் பகுதியாக The Outlet Store புகழ்பெற்ற வண்ணமுள்ளது. இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் பல புதிய காட்சியறைகளை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் திறப்பதற்கு The Outlet Store திட்டமிட்டுள்ளது. www.facebook.com/TheOutletStore.lk ஊடாக புதிய தயாரிப்புகள், செய்திகள் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM