90 வயதிலும் இளைஞர்களுக்கு இணையான உடற்கட்டு அழகினைப் பேணி, ஆணழகன் போட்டியில் பங்கேற்று உலகளவில் இலட்சக்கணக்கானோரை ஈர்த்துள்ளார், ஜப்பானைச் சேர்ந்த கனசாவா (Toshisuke Kanazawa) என்ற வயோதிபர்.
இவர் ஸ்பெயின் நாட்டில் சாண்டா சுசானாவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் ஜப்பான் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.
50 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டிப் பிரிவில் பங்கேற்க மிகத் தீவிர உடற்பயிற்சி எடுத்துக்கொண்ட இவரது, உடல்வாகினை போட்டி மேடையில் கண்டு இளம் போட்டியாளர்கள் உட்பட பார்வையாளர்கள் அனைவரும் வியந்தனர்.
வயது முதிர்ந்தாலும் தனது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உடல் வலிதில் சற்றும் குன்றாத ஆணழகனாக கனசாவா தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பாராட்டப்பட்டு வருகிறார்.
“வயது அதிகரித்தாலும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்துவதே எனது நோக்கம்” என்கிறார் கனசாவா.
வயோதிபர்களுக்கான பிரிவில், முதல் மூன்று இடங்களுக்குள் அவர் தெரிவுசெய்யப்படாத போதிலும் இந்தப் போட்டியில் துணிந்து பங்குபற்றியதையே தான் பெருமையாக கருதுவதாகவும் அடுத்த போட்டியிலும் தான் பங்குபற்றவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM