Aitken Spence PLC நிறுவனத்தின் விருந்தோம்பல் பிரிவான Aitken Spence Hotels நிர்வகிக்கும் The Rainforest Ecolodge, தற்போது ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.
விருந்தினர்களின் அனுபவத்தின் மையத்தில் சிங்கராஜா வனக் காப்பகம், அதன் பல்லுயிர் வளம் மற்றும் அதைச் சூழ்ந்து வாழும் சமூகங்களை முன்னிறுத்துவதே இந்தப் புதிய அணுகுமுறையின் நோக்கமாகும்.
பொறுப்புணர்வுடன் கூடிய விருந்தோம்பல், இயற்கைப் பாதுகாப்பு மற்றும் இயற்கையைக் கண்டறியும் அனுபவம் ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், இலங்கையின் மிக முக்கியமான இயற்கைச் செல்வங்களில் ஒன்றை அணுகுவதற்கான விருந்தோம்பல் நுழைவாயிலாக இந்த விடுதியின் பங்கு மேலும் வலுப்பெறுகிறது.
என்சல்வத்த தேயிலைத் தோட்டத்திற்குள் அமைந்துள்ளதும் சிங்கராஜா வனக் காப்பகத்தை ஒட்டியிருப்பதுமான இந்தச் சூழலியல் விடுதி, இலங்கையின் மிக அற்புதமான இயற்கைச் சூழல்களில் ஒன்றில் அமைந்துள்ளது. இதன் வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் நிலைத்தன்மைக் கொள்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவின் Green Building Council வழங்கும் LEED® Platinum சான்றிதழையும் இது பெற்றுள்ளது.
UNESCO உலகப் பாரம்பரியத் தளமாகவும் மனிதரும் உயிர்க்கோளமும் தொடர்பான காப்பகமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள சிங்கராஜா, இலங்கையில் எஞ்சியுள்ள முதன்மை வெப்பமண்டல மழைக்காடுகளின் முக்கியமான பகுதியாகும். இங்கு தனித்துவமான தாவரங்கள், பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன, இருவாழ்விகள், முதுகெலும்பில்லா உயிரினங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றன.
இந்தப் புதிய தொடக்கம், உயிரோட்டமுள்ள இந்தச் சூழலமைப்பை அணுகுவதற்கான விருந்தோம்பல் நுழைவாயிலாக The Rainforest Ecolodge-ஐ நிலைநிறுத்துகிறது. இயற்கைக்கு அருகில் தங்குவதைக் கடந்த அனுபவத்தை விரும்பும் பயணிகளுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆர்வத்துடன் காட்டுக்குள் சென்று, அங்கு காண்பவற்றைப் புரிந்துகொண்டு, மழைக்காட்டின் சூழலில் முழுமையாகத் திளைத்து, இயற்கையுடனும் தங்களுடனும் இன்னும் ஆழமான தொடர்பை உணர்ந்தபடி திரும்ப விரும்புவோருக்கான இடம் இது.
இலங்கையின் மிகச் சிறப்புமிக்க இயற்கைச் செல்வங்களில் ஒன்றான சிங்கராஜ வனத்தை மக்களுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை Rainforest Ecolodge எமக்கு வழங்குகிறது.
அதேவேளை, இயற்கைப் பாதுகாப்பும் உள்ளூர் சமூகங்களும் இந்த அனுபவத்தின் ஒருங்கிணைந்த அங்கங்களாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறான அணுகுமுறையின் மூலமே அர்த்தமுள்ள சுற்றுலா அனுபவங்களை உருவாக்க முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
சுற்றுலாத்துறையின் எதிர்காலம் குறித்த Aitken Spence நிறுவனத்தின் பார்வையும் இதனுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. அதாவது, சிந்தனையுடனும் பொறுப்புணர்வுடனும், அந்த இடத்தின் தனித்துவத்துடன் ஆழமாக இணைந்தும் அமையும் சுற்றுலாவே எமது எதிர்காலப் பாதையாகும்,” என Aitken Spence Hotel Holdings PLC நிறுவனத்தின் தலைவரான ஸ்டாஷானி ஜயவர்தன தெரிவித்தார்.
Rainforest Ecolodge ஊடாக விருந்தோம்பல், இயற்கைப் பாதுகாப்பு மற்றும் புதியவற்றைக் கண்டறியும் அனுபவம் ஆகியவற்றுக்கு இடையில் ஆழமான உறவை உருவாக்குவதே எமது நோக்கமாகும். சிங்கராஜ வனம் ஓர் அசாதாரணமான இயற்கை வளமாகும்.
இந்தச் சிறப்புமிக்க இயற்கைச் சூழலைப் பற்றிய புரிதலையும் மதிப்பையும் ஒவ்வொரு விருந்தினரின் அனுபவமும் மேம்படுத்துவதுடன், அதனைச் சூழ்ந்து வாழும் சமூகங்களுக்கும் ஆதரவளிப்பதை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும். இந்தச் சூழலியல் விடுதி தங்குவதற்கான ஓர் இடமாக மட்டும் அமைந்துவிடக் கூடாது என்பதே எமது விருப்பம்.
மாறாக, இலங்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் உயிர்ப்புமிக்கதுமான இயற்கைச் சூழலமைப்புகளில் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கான அர்த்தமுள்ள நுழைவாயிலாக இது அமைய வேண்டும் என நாம் விரும்புகிறோம்,” என Aitken Spence Hotel Holdings PLC நிறுவனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளரான சுசித் ஜயவிக்ரம தெரிவித்தார்.
நிலைத்தன்மை மற்றும் விருந்தோம்பல் துறைகளில், இந்தச் சூழலியல் விடுதியின் அணுகுமுறை அங்கீகாரம் பெற்றுள்ளது. 2026ஆம் ஆண்டு ICRT Indian Subcontinent Awards விருதுகளில் ‘Nature Positive’ பிரிவில் The Rainforest Ecolodge வெள்ளிப் பரிசைப் பெற்றது. பல்லுயிர் பாதுகாப்பு, பொறுப்பான இயற்கை சார்ந்த அனுபவங்கள், சமூக நலனுக்கான பங்களிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கல்வி ஆகிய துறைகளில் மேற்கொண்ட பணிகளுக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மேலும், World Travel Awards விருதுகளில் 2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முன்னணி விடுதியாகவும் இது தெரிவுசெய்யப்பட்டது. இதன் மூலம், இயற்கையை மையமாகக் கொண்ட இலங்கையின் தனித்துவமான தங்குமிடங்களில் ஒன்றாக இதன் நிலை மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் நாட்டின் முதலாவது அதிகாரபூர்வமாக வகைப்படுத்தப்பட்ட சூழலியல் விடுதியாக அங்கீகரிக்கப்பட்ட இந்த இடம், ஆரம்பத்திலிருந்தே பொறுப்பான சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இதன் 20 தனித்தங்கும் குடில்கள், மறுபயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட கப்பல் கொள்கலன்கள் மற்றும் பிற மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இதனால், காட்டின் விளிம்பிலுள்ள தேயிலைத் தோட்டச் சூழலுடன் இணைந்த வகையில் தங்குமிடங்கள் அமைந்துள்ளன.
தனிப்பட்ட திறந்த மாடங்கள், நவீன வசதிகள் மற்றும் இயற்கையை நெருக்கமாக உணரச் செய்யும் காட்சிகள், சுற்றுப்புறத்திலிருந்து விருந்தினர்களைப் பிரிக்காமல் வசதியான தங்குமிட அனுபவத்தை வழங்குகின்றன.
ஆனால், உண்மையான அனுபவம் குடிலுக்கு அப்பால்தான் தொடங்குகிறது.
அதிகாலைகள் பறவைகளின் இனிய குரல்களால் உயிர்பெறுகின்றன. வழிகாட்டிகளுடன் நடைபெறும் பறவைகளை அவதானிக்கும் நடைப்பயணங்களில், மர உச்சிகளுக்கிடையே நகரும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைக் கூட்டங்களையும், வண்ணமயமாகத் தோன்றும் உள்ளூர் தனிச்சிறப்புப் பறவைகளையும் காணலாம். பகல் நேரப்பயணங்கள் மழைக்காட்டின் பல அடுக்குகளையும், அங்குள்ள மருத்துவத் தாவரங்களையும் பல்வகை வனவிலங்குகளையும் அறிமுகப்படுத்துகின்றன.
நீர்வீழ்ச்சிகளை நோக்கிய பயணங்கள், மரங்கள் சூழ்ந்த பாதைகள் வழியாகத் தெளிந்த நீரோடைகளுக்கும் இயற்கையான நீர்த் தடாகங்களுக்கும் அழைத்துச் செல்கின்றன. இரவு நடைப்பயணங்களில் தவளைகளின் ஒலி, அந்துப்பூச்சிகள், பல்லிகள், வௌவால்கள் மற்றும் இரவில் இயங்கும் பிற உயிரினங்கள் உருவாக்கும் முற்றிலும் மாறுபட்ட சூழலமைப்பை அனுபவிக்கலாம்.
அடர்ந்த மழைக்காடும் பயிரிடப்பட்ட தேயிலை நிலங்களும் சந்திக்கும் இடத்தில் இந்த விடுதி அமைந்துள்ளது. இதனால், தனித்துவமான ஓர் சூழலியல் மாற்றுப் பகுதி உருவாகியுள்ளது. இயற்கை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அறிவியலில் ஈடுபடுவோர், வெவ்வேறு வாழ்விடங்களுக்கு இடையே வனவிலங்குகள் எவ்வாறு நகர்கின்றன என்பதை அவதானிக்க இவ்விடம் வாய்ப்பளிக்கிறது.
வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை விளக்க மையமும் இணையவழி அறிவு மையமும் சிங்கராஜா தொடர்பான தகவல்கள், வெளியீடுகள், ஒலி-ஒளி உள்ளடக்கங்கள், உயிரின அறிமுகங்கள், இயற்கைப் பாதுகாப்பு குறித்த பார்வைகள் மற்றும் களக் குறிப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும்.
பயணிகள், மாணவர்கள், அறிவியலாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தங்குவதற்கு முன்பும், தங்கியிருக்கும் போதும், பின்னரும் இவற்றைப் பயன்படுத்தும் வகையில் இவை உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம், இந்தச் சூழலியல் விடுதி மழைக்காடு தொடர்பான அறிவு தொடர்ந்து வளர்ந்து வரும் மையமாக மாறும்.
இயற்கைப் பாதுகாப்பு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், இயற்கை ஆர்வலர்கள், வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், கலைஞர்கள், நலவாழ்வுப் பயிற்சியாளர்கள் மற்றும் பல்லுயிர் நிபுணர்களுடனான எதிர்காலக் கூட்டாண்மைகள் இந்த நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தும்.
அறிவியல் முயற்சிகள், இயற்கை அவதானிப்புகள், இயற்கை ஒலிகளைப் பதிவு செய்தல் மற்றும் அவற்றை ஆராய்தல், இயற்கைப் பாதுகாப்புக் கதைகளைப் பகிர்தல், மழைக்காட்டை பொறுப்புடன் அணுகுதல் ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதே இதன் இலக்காகும். நிபுணர்களும் அறிவியலாளர்களும் தங்களின் கண்டுபிடிப்புகளைப் பரந்த மக்களுடன் பகிர்ந்துகொள்ள உதவும் தளமொன்றையும் உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
இந்த அணுகுமுறையின் மையத்தில் உள்ளூர் சமூகங்களே இருக்கின்றன. உள்ளூர் வேலைவாய்ப்புகள், இயற்கை வழிகாட்டிகள் நடத்தும் அனுபவங்கள், சமூகங்களுடனான பயனுள்ள உறவுகளும் ஈடுபாடும், கிராமப்புற அறிவு, உணவுப் பாரம்பரியங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியவை விருந்தினர்களின் அனுபவத்தைச் சுற்றியுள்ள பிரதேசத்துடன் இணைக்கின்றன. கித்துள் பனைச் சாற்றைச் சேகரிப்பது மற்றும் மருத்துவத் தாவரங்கள் பற்றிய அறிவு முதல் தேயிலைப் பயிரிடுதல், கிராம வாழ்க்கை, மழைக்காட்டின் கதை என்பன பல தலைமுறைகளாக அதன் அருகில் வாழ்ந்து உழைத்த மக்களின் கதையிலிருந்து பிரிக்க முடியாதது.
இங்குதான் மீளுருவாக்கச் சுற்றுலா என்பது வெறும் கருத்தாக இல்லாமல் செயல்முறையாக மாறுகிறது. சிங்கராஜாவை அக்கறையுடன் அனுபவிக்கவும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிக்கவும், இயற்கைப் பாதுகாப்பு சூழலமைப்புகளுக்கும் சமூகங்களுக்கும் எவ்வாறு நன்மை அளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் விருந்தினர்கள் அழைக்கப்படுகிறார்கள். சுற்றுச்சூழலின் மீதான பாதிப்பைக் குறைப்பது மட்டுமே நோக்கமல்ல; இந்தப் பிரதேசத்தின் நீண்டகாலச் சூழலியல் மற்றும் சமூக நலனுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் சுற்றுலா மாதிரியை உருவாக்குவதே இலக்காகும்.
இயற்கையைப் பொறுப்புணர்வுடன் ஆராய விரும்பும் பயணிகளுக்கு The Rainforest Ecolodge ஓர் அரிய ஓய்விட அனுபவத்தை வழங்குகிறது. அன்றாட இரைச்சலிலிருந்து விலகி, இயற்கையுடன் மீண்டும் இணைவதற்கும், வனவிலங்குகள் மீதான நீண்டகால ஆர்வத்தைத் தொடர்வதற்கும் அல்லது பல்லுயிர் வளம் குறித்து முதன்முறையாகக் கற்றுக்கொள்வதற்கும் இது ஏற்ற இடமாகும். பறவை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள், கலைஞர்கள் மற்றும் இயற்கையை நேசிப்போருக்கான ஓய்விடமாகவும், அமைதி, தூய காற்று மற்றும் ஓர் இடத்துடனான ஆழமான தொடர்பை நாடும் பயணிகளுக்கான அமைதியான தங்குமிடமாகவும் இது திகழ்கிறது.

The Rainforest Ecolodge, இயற்கைப் பாதுகாப்புக்கான ஆதரவு மற்றும் விளக்க மையமாகவும், உயர்தர மழைக்காட்டு ஓய்விடமாகவும், இலங்கையின் மிகப் பெரும் இயற்கைச் செல்வங்களில் ஒன்றை அணுகுவதற்கான விருந்தோம்பல் நுழைவாயிலாகவும் மீண்டும் உருவெடுத்து வருகிறது.
இங்கு, அறிவு வழிகாட்டும் சாகசம்; பொறுப்புணர்வு வடிவமைக்கும் விருந்தோம்பல். காட்டுக்குள் செல்லும் ஒவ்வொரு பயணமும் ஓர் எளிய அழைப்புடன் தொடங்குகிறது: “வாருங்கள், இன்னும் நெருக்கமாகக் கவனியுங்கள்.”
Aitken Spence Hotels பற்றி
Aitken Spence Hotels என்பது இலங்கையின் முன்னணி, வலுவான நிறுவனக் குழுமங்களில் ஒன்றான Aitken Spence PLC-யின் விருந்தோம்பல் பிரிவாகும். இலங்கை, மாலைத்தீவு, ஓமான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
Heritance Hotels and Resorts, Aitken Spence Hotels-இன் முதன்மை வர்த்தகநாமமாகும்; அதனுடன் Adaaran Hotels & Resorts மற்றும் Turyaa ஆகிய வர்த்தகநாமங்களும் இணைந்துள்ளன. ஓய்வுப் பயணம், ஆடம்பரம் மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த இடங்கள் எனப் பல்வேறு வகையான விருந்தோம்பல் அனுபவங்களை இந்த வர்த்தகநாமங்கள் வழங்குகின்றன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM