எம்முடைய பிள்ளைகளில் சிலருக்கு உணவு விழுங்கும் போது பாரிய அசௌகரியங்கள் ஏற்படலாம். இதனால் பிள்ளைகள் உணவின் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்ளும். சில பிள்ளைகளுக்கு சுவாசிப்பதில் தடுமாற்றம் நீடிக்கும். இது போன்ற தருணங்களில் பெற்றோர்கள் அச்சமடைந்து உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று வைத்தியர்களை சந்தித்து சிகிச்சை பெறுவர்.
அந்த தருணத்தில் வைத்தியர்கள் பிள்ளைக்கு 'வாஸ்குலர் ரிங்' என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் அரிய வகையினதான இதய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறுவார்கள். அத்துடன் இத்தகைய பாதிப்பு குறித்து பின்வரும் விளக்கம் அளித்து, அதனை சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தையும் அளிப்பர்.
திட உணவுகள் - திரவ உணவுகள் விழுங்குவதில் பிள்ளைகளுக்கு சிரமம், சுவாச தொற்று, சுவாச பிரச்சனை, நாள்பட்ட இருமல் குறிப்பாக இரவு நேரத்தில் அல்லது பகலில் உறங்கும் தருணத்தில் அல்லது சாப்பிடும் தருணத்தில் தொடர்ச்சியாக இருமல் ஏற்படுவது, ஒலியுடன் கூடிய மூச்சு , வளர்ச்சியில் பாதிப்பு... ஆகியவை இத்தகைய நோய் தொற்றின் அறிகுறியாக அவதானிக்கலாம்.
வாஸ்குலர் ரிங் என்பது எம்முடைய மூச்சுக்குழாய் மற்றும் உணவுக் குழாயை சுற்றி ரத்த நாளங்கள் ஒரு வளையத்தை உருவாக்குகிறது. இது உணவுக்குழாய் மற்றும் மூச்சுக் குழாய் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, பாதிப்பை உண்டாக்குகிறது. நாளடைவில் இந்த ரத்த நாளங்கள் அசாதாரண வகையில் வளர்ச்சி அடைவதால் அவை தானாக பிரிவதற்கு பதில் ஒரு உறுதியான வளையத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சுவாசிப்பதிலும், பசியாறுவதிலும் விவரிக்க இயலாத அசௌகரியங்கள் உண்டாகிறது.
பெரும்பாலும் தாயின் வயிற்றில் சிசு வளரும் போது இத்தகைய பாதிப்பு உருவாகிறது. சிலருக்கு மரபணு மாற்றங்கள், ரத்த நாளங்களில் இயல்பை மீறிய அசாதாரணமான வளர்ச்சி, பேறு காலத்தின் போது உட்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவு என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
மேலும் பிள்ளைகளுக்கு மூன்று வகையினதான வாஸ்குலர் வளையங்கள் பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள் இதனை தொடக்க நிலையில் கண்டறியாவிட்டால் உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
இத்தகைய பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளையும், அதனுடன் எக்கோ கார்டியோ கிராபி, அல்ட்ரா சவுண்ட் ஆகிய பரிசோதனைகளையும் மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.
வைத்தியர் ஜாவித்
தொகுப்பு அனுஷா
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM