இந்த தீபாவளியன்று, நமது அழகான தீவு முழுவதும் நம்பிக்கையையும், செழிப்பையும் பரப்ப நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்ற தொனிபொருளில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) திட்டத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், வத்தளை ரோட்டரி கழகம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் ஆகியவற்றின் இணைப்பில் சிறப்புத் தீபாவளி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை, கொழும்பு 7இல் அமைந்துள்ள சுதர்ஷி மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இது குறித்து இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) திட்டத்தின் முன்னாள் மாணவர் சங்கம் குறிப்பிடுகையில், வெறும் 5 நிமிட நேரம் கூட ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் அழைத்து வந்து ஒன்றாக விளக்கை ஏற்றுங்கள். தீபாவளி என்பது இந்துக்களின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது இலங்கையிலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
'தீபாவளி' என்றால் 'தீபங்களின் வரிசை' என்று பொருள்.இந்தத் திருநாள், இருளை அகற்றி ஒளியைக் கொண்டுவருவதைக் குறிக்கிறது.
இராமாயண இதிகாசத்தின்படி, 14 ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு அயோத்திக்கு இராமர், சீதை மற்றும் இலட்சுமணன் திரும்பியதை வரவேற்கும் விதமாகவும், நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ண பகவான் வதம் செய்ததை நினைவுகூரும் வகையிலும் இது கொண்டாடப்படுகிறது.
இது நன்மை தீமை மீது வென்ற வெற்றியின் அடையாளமாகும். தீபாவளி நாளன்று மக்கள் தங்கள் வீடுகளை விளக்குகளாலும், வண்ணமயமான கோலங்களாலும் அலங்கரிக்கின்றனர்.
புதிய ஆடைகளை அணிந்து, சுவையான இனிப்புகளைப் பகிர்ந்து, பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர். இது குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்று கூடி, மகிழ்ச்சியையும் அன்பையும் பரிமாறிக்கொள்ளும் ஒரு அழகான சந்தர்ப்பமாகும்.
இலங்கையைப் பொறுத்தவரை, தீபாவளி என்பது அனைத்து சமூக மக்களும் இன, மத பேதமின்றி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து, நல்லிணக்கத்தை வளர்க்கும் ஒரு பொன்னாளாகத் திகழ்கிறது. அன்பும் அமைப்பும் எங்கும் ஒளிரட்டும் என குறிப்பிட்டுள்ளது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM