கடந்த பல வருடங்களாக மத்திய கிழக்கு நாட்டில் வீட்டு பணிப்பெண்ணாக சேவை புரிந்து தாய் நாட்டிற்கு வந்த தனது மனைவியின் கள்ளக் காதலனான இராணுவ வீரரின் இரண்டு பற்கள் உடையுமாறு தாக்கிய கணவரையும் மாமனாரையும் கைது செய்ய அநுராதபுர பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பெண்னை விட 10 வயது இளமையான திருமணம் ஆகாத இராணுவ வீரர் யாழ்ப்பாணச் சந்தியில் வைத்து மிக கொடூரமாக தாக்கப்பட்டு பல நாட்கள் தொடர்ந்து அநுராதபுர போதனா வைத்தியாலையில் சிகிச்சை பெற்று நேற்று முன் தினம் வீடு திரும்பிய நிலையிலேயே அநுராதபுர பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

மத்திய கிழக்கு நாட்டிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்று நாடு திரும்பிய 42 வயதுடைய பெண் மற்றும் 32 வயதுடைய இராணுவ வீரருக்கிடையில் ஏற்பட்ட காதல் தொடர்பால் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு முறையாக நடந்த முதல் திருமணத்தில் 22 வயதுடைய திருமணமான இளம் மகனொருவரும் உள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் தனது மனைவியிடம் அன்பாக நடந்து கொண்டுள்ள போதிலும் இளம் இராணுவ வீரரோடு ஏற்பட்ட காதல் தொடர்பால் கணவரை விட்டு பிரிந்து இராணுவ வீரரோடு வாழ முடிவு செய்து அவரோடும் வாழ்ந்து வந்துள்ளார்.

தன்னை வேண்டாம் என்று பிரிந்து சென்ற மனைவியின் பொருட்களை எடுத்துச் செல்லுமாறு மனைவியின் காதலனான இராணுவ வீரருக்கு பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.

கணவனின் அழைப்பின் பேரில் தனது பொருட்களை எடுத்துச் செல்ல தனது காதலனுடன் கணவரின் வீட்டுக்குச் சென்ற வேளையிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் நேர்ந்துள்ளது.

தனது வயதில் மூத்த காதலியின் கணவரின் தாக்குதலுக்குள்ளான இராணுவ வீரர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் தனது காதலியையும் அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் சென்று காதலியின் கணவருக்கெதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு செய்த இராணுவ வீரரிடம் பொலிஸார் இது குடும்ப விவகாரம் என்றும் தன்னிலும் 10 வயது கூடிய திருமணமான பெண்னை காதலிப்பது தவறு என அறிவுறுத்திய போதும் “அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் எனவும் நான் வழங்கிய முறைப்பாட்டிற்கு நடவடிக்கை எடுங்கள்” என கூறியுள்ளார்.

குடும்ப விவகாரமாக இருந்தாலும் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரணை செய்து பெண்ணின் கணவரையும் மாமனாரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அநுராதபுர பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். .