நாற்பது வயதைக் கடந்துவிட்டாலோ அல்லது உயர் குருதி அழுத்தம், சர்க் கரை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தவில்லை என்றாலோ இதயம் பாதிக் கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதய பாதிப்பிற்காக சிகிச்சை எடுக்கும் போது சத்திர சிகிச்சையை தெரிவு செய் வதில்லை.

மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினாலும் இதயத்தில் சத்திர சிகிச்சையை மனமுவந்து செய்துக்கொள்வதில்லை. இதனை கருத்தில் கொண்டே மருத்துவ உலகம் இதய பாதிப்பிற்கு தற்போது சத்திர சிகிச்சையில்லாமல் பல புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தியிருக் கிறது. இதனை அறிந்ததும் இதைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், என்னென்ன புதிய சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத் தப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் இத்துறையில் பல ஆண்டு கால அனுபவம் பெற்றவரும், சென்னையில் நியோமெட் மருத்து வமனையின் நிர்வாக இயக்குநரும், இதய சிகிச்சை நிபுணருமான வைத்தியர் எல் சிவபாலன் அவர்களை சந்தித்தோம்.

இதய அடைப்பிற்கு சத்திர சிகிச்சையில்லா சிகிச்சை முறை இருக்கிறதா?

இதய பாதிப்பினை நீக்க இரண்டு வித சிகிச்சை முறைகள் இருக்கிறது. ஒன்று கீலேசன் தெரபி மற்றொன்று EECP என்கிற சிகிச்சை முறை. நம்முடைய உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றுவார்களே அதே போன்றது தான் கீலேசன் தெரபி. ஒவ்வொருவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சில சத்துப் பொருள்களை (அமினோ ஆசிட்ஸ் மற்றும் மல்டி விற்றமின்கள்) ஹைலிக்வீடாக நரம்பு வழியாக செலுத்துவோம். இதன் மூலம் இரத்த நாளங்களில் தங்கியிருக்கும் உலோக அசுத்தங் களை வெளியேற்றிவிடும். இதன் மூலம் அடைப்பிற்கான காரணமான கல்சியத்தையும் கரைத்து வெளியேற்றிவிடும். இதனையடுத்து இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் சீரடைகிறது. இரத்த ஓட்டம் சீரடைந்தால் இதயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மற்றொரு முறையான இ இ சி பி (Enhan ced External Counter pulsation)யில், நாம் மருத்துவர்களை சந்திக்கும் போது எம்முடைய இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்காக ஒரு பேடை கட்டுவார்களே அதே போல் உடல் முழுவதும் முக்கியமான இடங்களில் இதனை கட்டிவிடுவார்கள். அதன் பிறகு கால் களிலிருந்து இதயத்திற்கு வேகமான முறையில் இரத்தத்தை பம்ப் செய்யும். இதன் மூலம் இத யத்திற்குச் செல்லும் இரத்த குழாய்களில் ஏதே னும் அடைப்புகள் இருந்தால் அகலும்.

இதை பம்ப் செய்வது நோயாளியின் இதயத்துடிப்பை துல்லியமாக கணக்கிட்டு மேற்கொள்ளப்படும். இதற்கு சிறப்பு நிபுணரை அணுகவேண்டும். முப்பது நிமிடம் மட்டுமே இவ்வித சிகிச்சை மேற்கொள்ளப்படும். பாது காப்பானது. அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை. நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சத்திர சிகிச்சை செய்து கொள்ள விரும்பாத வர்களுக்கும் இது நல்லதொரு சிகிச்சை முறை. அதே போல் ஒன்றுக்கும் மேற்பட்ட அடைப்புகள் இருந்தாலும் இதனை மேற் கொள்ளலாம். அதே சமயத்தில் அவர்களுக்கு முப்பது முதல் நாற்பது நாள்கள் வரை மேற்கொண்டால் பலன் கிடைக்கும்

இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதனை குணப்படுத்துவது எப்படி?

இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த குழாய்களை அல்லது தமனிகளில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதனை குணப்படுத்துவதற்கு தற்போது கீலேஷன் தெரபி என்ற சிகிச்சை அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மயோகார்டியல் எனப்படும் மாரடைப்பு தடுக்கப்படுகிறது. அதீரோஸ்கிளோரோஸிஸ் எனப்படும் பெருந்தமணி தடிப்பு நோயும் குணப்படுத்தப்படுகிறது.

இவ்வித சிகிச்சையில் நோயாளிக்கு அவரின் பாதிப்பினை அறிந்த பின் Ethyl Diamino tetra Acetic Acid என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு இக்குழாயில் உள்ள அடைப்பு நீக்கப்படுகிறது. இதனால் சிறு துளை சத்திர சிகிச்சையும், பைபாஸ் சத்திர சிகிச்சையும் தவிர்க்கப்படுகிறது. இவ்வித சிகிச்சைக்கு பின் இதயத்திலிருந்து செல்லும் இரத்த குழல்கள் தங்களுடைய பணியினை சீராகவும்,இயல்பாகவும் மேற்கொள்ள வகை செய்யப்படுகிறது.

ஒரு சிலருக்கு T I A எனப்படும் Transient Ischiameic Attack என்ற பாதிப்பிற்கும் இவ்வித சிகிச்சை பலனளிக்கிறது. இந்த பாதிப்பு ஏற்படும் போது, தற்காலிகமாக மூளைக்கு செல்லும் பிராண வாயு தடைப்பட்டுவிடும். இதனால் நோயாளிக்கு வாத நோய், பேச்சு குழறல், கண் பார்வை பாதிப்பு போன்றவை ஏற்படக்கூடும்.

இந்த சிகிச்சையின் மூலம் இரத்த அழுத்தம் முழு அளவில் கட்டுப்படுத்தப்படும். ஒரு சிலர் பைபாஸ் சத்திர சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற சத்திர சிகிச் சைக்கு பின்னரும் இவ்வித சிகிச்சையை மேற்கொள்ளலாமா? என கேட்கிறார்கள். அப்படியும் மேற்கொள்ளலாம். இவ்வித சிகிச்சையை செய்து கொண்டால் மேற்கண்ட இரண்டு வித சத்திர சிகிச்சையும் தவிர்க்கலாம். மேலும் கடந்த முப்பதாண்டுகளில் கீலேஷன் தெரபியை செய்து கொண்ட பத்து மில்லியன் நோயாளிகளில் ஒருவருக்கு கூட இதுவரை எதிர்மறையான பாதிப்பு ஏற்பட்டதில்லை. அதனால் முற்றிலும் பாதுகாப்பான இவ்வித சிகிச்சையை நீங்கள் மேற்கொள்ளலாம்.

ஓஸோன் தெரபியை மேற்கொள்வது எந்த ளவிற்கு பலனைத்தரும்?

இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல் லும் குழாய்கள் மற்றும் செல்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை சீராக்கி மீண்டும் புத்துணர்வு அளித்து, இதனை இயல்பாக பணி செய்வதற்கு ஓஸோன் தெரபி மேற்கொள்ளப் படுகிறது. இதன் மூலமாகவும் இதயப் பாதிப் பை ஏற்படுத்தும் குழாய்களையும், அதன் இயக்கங்களையும் கட்டுக்குள் கொண்டுவர இயலும்.

இவ்வித சிகிச்சையின் போது நோயாளியின் உடல் எடை, உயரம், இரத்த அழுத்தம், சர்க் கரையின் அளவு, இதய பாதிப்பின் வீரியம் உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்த பின் ஒரு அமர்விலோ அல்லது சில அமர்விலோ ஒஸோன் என்ற வாயு மூலம் சிகிக்கை அளிக்கப்பட்டு குண மாக்கப்படும்.

இந்த சிகிச்சை குறைந்தபட்சம் இருபது நிமிடம் வரை கூட சிலருக்கு நீடிக்கும். இதனை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தால் இதய பாதிப்பிலிருந்தும் மட்டுமல்லாமல் உடலுக்கு ஏற்படும் வேறு சில பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம்.

அதே சமயத்தில் வேறு சிலருக்கு ஹைட்ரோஜென் பெரரோக்ஸைடு IV எனப்படும் ஓஸோன் 3 ஐ நேரடியாக செல்களுக்கே செலுத்தும் சிகிச்சையும் மேற் கொள்ளப்படுகிறது. இவ்வித சிகிச்சையை எச்சரிக்கையுடனும்,முழுமையான கவனத் துடனும் செய்யப்படுகிறது. குறைவான பிராண வாயுயை கொண்டிருப்பவர்கள், இரத்தகுழாயில் குறைவான வேகத்தில் இரத்தம் செல்லுதல் போன்ற பிரச்சினையில் இருப்பவர்களுக்கு இவ்வித சிகிச்சை பலனளிக்கும்.

நெஞ்சு வலியை குறைக்க எக்ஸ் பிளேக் தெரபியை பரிந்துரைக்கிறார்களே. அதனை செய்து கொள்ளலாமா?

தாராளமாக. இதயத்திலிருந்தோ அல்லது இதயத்திற்கோ செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதால் ஏற்படும் தடிமனை குறைப்பதற்கு ஏற்ற சிகிச்சை இது தான். இதனை சுவீஸ் நாட்டு மருத்துவர்கள் தான் கண்டறிந்து அறிமுகப்படுத்தினர். மார டைப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக இவ்வித சிகிச்சை மேற்கொண்டால் நல்ல பலன் கிட்டும். சோயாபீன்ஸிலிருந்து உருவாக்கப்பட்ட மருந்துகளே இதில் பயன் படுத்தப்படுகின்றன. இவ்வித சிகிச்சை நோயாளியைப் பொறுத்து ஒன்றரை மணி தியாலம் முதல் இரண்டு மணி தியாலம் வரை ஒரு அமர்வில் மேற்கொள்ளப்படுகிறது. இவை இரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பை அகற்றி, மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. அத்துடன் இதயத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொடர்பு எண் 0091 44 26201147 மற்றும் மின்னஞ்சல் முகவரி neomedhospital@gmail.com

சந்திப்பு: புகழ்