வவுனியா பேருந்து நிலையத்தில் இன்று காலை 11.30 மணியளவில் கஞ்சாவினை எடுத்துச் சென்ற நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இன்று 11.30 மணியளவில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் ராஜ்மோகன் என்பவர் கிளிநொச்சியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற பேருந்தில் 3 கிலோ 610 கிராம் கேரளா கஞ்சாவினை தனது பயணப்பொதியில் மறைத்து எடுத்துச் சென்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போதை ஒழிப்பு பிரிவினர் வவுனியா பேருந்து நிலையத்தில் சந்தேகத்தில் சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவினைக்கைப்பற்றியுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.