கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய  ஜனநாயக போராளிகள் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் உள்ள  பாரதி தனியாா் விடுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மாவீர்களின் தாயொருவா்  சுடரேற்றி வைக்க, தொடர்ந்து அருட்தந்தை மற்றும் தமிழ்த்தேசிய ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் மற்றும் தலைவா் ஆகியோா் விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

ஏற்கனவே ஜனநாயக போராளிகள் கட்சி இயங்கி வருகின்ற நிலையில் புதிதாக தமிழ்த் தேசிய ஜனநாயக போராளிகள் கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பல முன்னாள் போராளிகள்  மாவீரர்களின் பெற்றோா் உறவினர்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.