"வித்யா பாரதி கலா சேவா” விருது பெற்ற  சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் 

Published By: Digital Desk 2

01 Nov, 2026 | 04:06 PM
image

கனடாவின் ரொறன்ரோவில் அமைந்துள்ள  ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் முதல்வர், பிரதமகுரு, சிவாகம கலாநிதி, சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்களுக்கு "வித்யா பாரதி கலா சேவா’’ விருது வழங்கிய கெளரவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற  4 ஆவது ஆண்டு விழாவில் வித்யா பாரதி கலா சம்மேளனத்தினால் (4th Annual Vidya Bharati Kala Sammelan), இவருக்கு கலாச்சார மேம்பாட்டாளருக்கான (Cultural Promoter Award ) "வித்யா பாரதி கலா சேவா விருது" வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார்.  

நமது பாரம்பரியம், கலாச்சாரம், கலைகள் மற்றும் ஆன்மீக விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்து, கனடாவில் அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்கும் இவரது அயராத அர்ப்பணிப்பிற்கும், சமூகப் பணிகளுக்கும் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம் இதுவாகும்.

இவ்விழாவில் கனடா அரசின் தொழிலாளர் துறை செயலாளர் ஜான் ஜெருசெல்லி (Hon. John Zerucelli), சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி. ஐ. லட்சுமணன் (Dr. V. I. Lakshmanan, O.C), மற்றும் Sugshe குழுமத் தலைவர் கணேசன் சுகுமார் (Mr. Ganesan Sugumar) ஆகியோர் இணைந்து இவ்விருதை வழங்கி சிறப்பித்தனர்.

ஆலயப் பணிகளிலும், சமூகத் தலைமைத்துவத்திலும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் வழிகாட்டி வரும் சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்களுக்கு இறைவன் திருவருளால் மென்மேலும் ஆன்மீக, சமூக, கலை, கலாசாரப் பணிகளைத் தொடர ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானைப் பிரார்த்திக்கின்றோம் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32
news-image

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப்...

2026-11-03 11:12:25
news-image

தேசிய தீபாவளி நிகழ்வு 2026 –...

2026-11-03 09:57:46
news-image

நாச்சம்மை சிவசந்தோஷி வைரவனின் 'சண்மார்க்கம்' அரங்கேற்றம்

2026-11-02 18:56:51
news-image

தீபாவளி நன்னாளில் இலங்கைக்காக ஒரு விளக்கேற்றுங்கள்!

2026-11-02 11:54:35
news-image

"வித்யா பாரதி கலா சேவா” விருது...

2026-11-01 16:06:48