புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் மூன்றாவது இலக்கியச் சந்திப்பு

Published By: Digital Desk 2

01 Nov, 2026 | 02:27 PM
image

புத்தளம் மாவட்ட இணைப்பாளர் A.H.F. பர்வினின் ஏற்பாட்டில், புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் மூன்றாவது இலக்கியச் சந்திப்பு நேற்று சனிக்கிழமை (31) கல்பிட்டி பிரதேச செயலகக் கூட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

காலை 9.30  முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், கல்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் செயற்பட்டு வரும் புதிய அலை கலை வட்ட மகளிர் அணி, மாவட்ட இணைப்பாளர்கள் ஊடாக கலைஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைத்து இவ்வாறான இலக்கியச் சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில், புத்தளம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பு, கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்தல், பெண் படைப்பாளர்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், புதிய தலைமுறை கலைஞர்களை ஊக்குவித்தல் மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான கலை இலக்கிய உறவுகளை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. 

தொடர்ந்து  புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர்  A.H.F. பர்வின் வரவேற்புரையாற்றினார்.

தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவரும், தில்லையூர் அரசினர் முஸ்லிம் கணிஷ்ட வித்யாலயத்தின் அதிபரும், அகில இலங்கை தேசிய ஐக்கிய ஆசிரியர் சங்க உப தலைவரும், கவிஞருமான  S.M. அரூஸ், மற்றும் புதிய அலைகளை வட்ட மகளிர் அணியின் தலைவி, வவுனியா மாவட்ட காணிப்பதிவாளர், எழுத்தாளர் சிவகெளரி  ( சுடரி) தலைமையில் புதிய அலை கலை வட்டத்தின் ஸ்தாபகர்  ராதா மேத்தா அவர்களின் வழிகாட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை புத்தளம் வலய உடற் கல்விப் பணிப்பாளர்  பைரூஸ் சமான், ஓய்வுநிலை அல்-அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி ரோஸ் புகாரி, போரூட் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்  மகீன், SEDO நிறுவனத்தின் பணிப்பாளர்  முனாஸ், கல்பிட்டி பிரதேச செயலகத்தின் கலாசார அபிவிருத்தி மேலாளர் திருமதி ஸ்ரீயாணி சமரசின்ஹ, சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான செல்வி பாத்திமா சூபியானி, சூழலியலாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான  வெள்ளங்கரை நியாஸ்,  கல்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் உறுப்பினரும், சுற்றாடல் முன்னோடியும், கப்பலடி முஸ்லிம் பாடசாலையின் ஆசிரியருமான  சுகைப், கல்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் உறுப்பினரும், தில்லையூர் தாருல் அர்க்கம் பள்ளியின் பேஸ் இமாமும், கவிஞருமான அஷ்ஷேக் ரிப்கான் ரஹ்மானி, ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் சார்பில் செயலாளர் ஸ்ரீமதி, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கமலினி, மன்னார் மாவட்ட இணைப்பாளரும் பொருளாளருமான டாளினி ஆகியோரும் கல்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் சார்பில் அதன் உபசெயலாளரும் அல்ஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபரும் கலைஞருமான  எம். எம். எம் நவ்ப்,  செயலாளரும் சிரேஷ்ட ஊடகவிய லாளருமான  எம். எச். எம். சியாஜ், உறுப்பினர்களான மஜித்கான்,  எஸ் எம். ரிஸ்வி ஹுசைன், ரமீனா ரபீக், சீரின் ஜஹான், திருமதி சஹரியா, செல்வி டில்ஷா, குணசேகரன், கேசானி மோகனதாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். 

அல்-ஹிரா பாடசாலை மாணவி M.H. ஸைனா சுலைம் நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, கல்பிட்டியின் தனித்துவமான பாரம்பரியக் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை இச்சந்திப்பின் சிறப்பம்சமாக அமைந்தது.

கல்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்ற உறுப்பினர்கள், புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் புத்தளம் மாவட்ட உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய  ஆர்வலர்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உயரிய மனிதநேயச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இச்சந்திப்பு, இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து கலை மற்றும் இலக்கியத்தின் ஊடாக மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சிறப்பான முயற்சியாகவும், கல்பிட்டியின் கலை இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகவும் அமைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32
news-image

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப்...

2026-11-03 11:12:25
news-image

தேசிய தீபாவளி நிகழ்வு 2026 –...

2026-11-03 09:57:46
news-image

நாச்சம்மை சிவசந்தோஷி வைரவனின் 'சண்மார்க்கம்' அரங்கேற்றம்

2026-11-02 18:56:51
news-image

தீபாவளி நன்னாளில் இலங்கைக்காக ஒரு விளக்கேற்றுங்கள்!

2026-11-02 11:54:35
news-image

"வித்யா பாரதி கலா சேவா” விருது...

2026-11-01 16:06:48