பெண்களின் ஆரோக்கியமே குடும்பத்தின் பலம்: கொட்டாஞ்சேனையில் இலவச மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம்

Published By: Digital Desk 2

01 Nov, 2026 | 12:49 PM
image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்ரமசிங்கவின் நெறிப்படுத்தலில், ‘She Leads’ மகளிர் செயற்பாட்டு சங்கம் மற்றும் ‘பிரஜா சக்தி’ கொட்டாஞ்சேனை கிழக்கு வட்டாரக் குழு ஆகியன இணைந்து பெண்களுக்கான இலவச மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாமை அண்மையில் நடத்தியுள்ளன.

கொட்டாஞ்சேனை கதீட்ரல் ஆண்கள் பாடசாலையில் நடைபெற்ற இம்முகாமில் 100இற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

‘ஆரம்பத்திலேயே கண்டறிவோம்; ஆயுளைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொழும்பு மாநகர முதல்வர் வ்ராயி கெலி பல்தாசர் (Vraie Cally Balthazaar) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக மீனா சுஜந்தன் கலந்துகொண்டார்.

இதன்போது, கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதாரத் துறை (D1 MoH) மருத்துவர் பவித்ரா முத்துகுட தலைமையிலான மருத்துவக் குழுவினர் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன், கொழும்பு மாநகர சபையின் ஆயுர்வேதத் துறைப் பணிப்பாளர் மருத்துவர் கமகே மற்றும் மருத்துவர் உத்பலா ஆகியோர் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் புற்றுநோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர்.

இதன் ஒரு பகுதியாக, பங்கேற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த ஆயுர்வேத மூலிகைக் கஞ்சியும் இலவசமாக வழங்கப்பட்டது.

மேற்கத்திய மருத்துவமும் பாரம்பரிய உணவு முறையும் இணைந்த களம், கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதாரத் துறை (D1 MoH) மருத்துவர் பவித்ரா முத்துகுட தலைமையிலான மருத்துவக் குழுவினர், பெண்களுக்கு அவசியமான மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Pap Smear) மருத்துவப் பரிசோதனைகளை மிகவும் அக்கறையுடன் முன்னெடுத்தனர்.

அதேவேளை, மாநகர சபையின் ஆயுர்வேதத் துறைப் பணிப்பாளர் மருத்துவர் கமகே மற்றும் மருத்துவர் உத்பலா ஆகியோர், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலமாகப் புற்றுநோய் வரும் முன் அதனை எவ்வாறு தடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்த பெறுமதிமிக்க விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) கோசல லியன ஆராய்ச்சி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

மேலும், நிகழ்வுக்கான இடவசதிகளை வழங்கிய கதீட்ரல் ஆண்கள் பாடசாலை அதிபர் சந்தன ருபானந்த, முரளி யோகன், சிற்றுண்டிகளை வழங்கிய கொட்டாஞ்சேனை வைஷ்ணவி விஹார் உணவகம் மற்றும் புகைப்படக் கலைஞர் ஸ்டீவன் உள்ளிட்ட பலரும் தமது பங்களிப்புகளை வழங்கினர்.

‘She Leads’ மகளிர் செயற்பாட்டு சங்கத்தின் ஆலோசகர் பிரமிளா சந்திரசேகர், சங்க உறுப்பினர்கள், ‘பிரஜா சக்தி’ கொட்டாஞ்சேனை கிழக்கு வட்டாரக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் இம்முகாம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

பெண்கள் தமது உடல்நலனில் அக்கறை செலுத்துவதுடன், மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகளைத் தவறாது மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32
news-image

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப்...

2026-11-03 11:12:25
news-image

தேசிய தீபாவளி நிகழ்வு 2026 –...

2026-11-03 09:57:46
news-image

நாச்சம்மை சிவசந்தோஷி வைரவனின் 'சண்மார்க்கம்' அரங்கேற்றம்

2026-11-02 18:56:51
news-image

தீபாவளி நன்னாளில் இலங்கைக்காக ஒரு விளக்கேற்றுங்கள்!

2026-11-02 11:54:35
news-image

"வித்யா பாரதி கலா சேவா” விருது...

2026-11-01 16:06:48