சிறுநீரக கற்கள் மீண்டும் வராமலிருக்க என்ன செய்வது?

Published By: Robert

01 Feb, 2016 | 02:07 PM
image

சிறுநீரகக் கல் முதல் முறை வந்தவர் களில் ஐம்பது சதவீதத்தினருக்கு மீண்டும் அக்கல் வர வாய்ப்புண்டு. இதனை தவிர்க்க முறையாக மருத்துவர்களின் ஆலோசனை யின்படி செயல்படுபவர்களுக்கு இவை வராமல் தடுக்கப்பட்டுவிடும். ஆனால் மருத்து வர்களின் ஆலோசனையையோ அல்லது அறிவுரையையோ அலட்சியப்படுத்தினால் அக்கல் மீண்டும் வரும். இரண்டாம் முறையும் சிறுநீரகத்தில் கற்கள் தோன்றியவர்களுக்கு மீண்டும் மீண்டும் அக்கல் பிரச்சினை வரு வதற்கு வாய்ப்புண்டு.

இத்தகைய பிரச்சினை வராமலிருக்க வேண்டும் என்றால், உங்களுக்கு சிறுநீரகக் கல் பிரச்சினை வந்தபோது, அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்றியிருந்தாலோ அல்லது வேறு சிகிச்சையின் மூலமாக தானாகவே வெளியேறியிருந்தாலோ, அந்த கல்லை பரி சோதித்து, அதன் இரசாயனத்தன்மை மற்றும் அதன் இரசா யன கூட்டு எப்படிப் பட்டது என்பதை அறிய வேண்டியது அவசியம். இதை வைத்துதான் மீண்டும் எப்படிப்பட்ட சிறுநீரக கல் உரு வாகியிருக்கிறது அல்லது உருவாகும் என்பதை சொல்வார் கள். ஒரு சிலர் லேசர் சத்திர சிகிச்சை செய்து கல்லை அப்புறப்

படுத்தியிருப்பார்கள். அதனால் கல்லை சேகரித்து வைத்திருக்கமட்டார்கள்.

இவர்களும், சிறுநீரக கல்லை எடுத்து வைக்காதவர்களும் சிறுநீரக கல்லிற்கான சிறப்பு மருத்துவ நிபுணரை அணுகவேண்டும். அவர்கள், உங்கள் உடலில் சிறுநீரக கல்லை உண்டாக்கும் இரசயானங்களின் அளவு, இரத்த அளவு, சிறுநீரின் அமில மற்றும் காரத்தன்மை, 24 மணி நேர சிறுநீர் சோதனை, சிறுநீரில் வெளியேறும் இரசாயனங்களின் அளவு ஆகியவற்றை பரிசோதித்து, எந்த வகையினதான கல் உண்டாகக்கூடும் என்பதை கணித்து கூறுவார்.

அத்துடன் உங்களின் பணியிட சூழல், வேலையின் தன்மை, உணவுப் பழக்கங்கள், மருத்துவ வரலாறு, குடும்பத்தில் வேறு எவரேனுக்கேனும் சிறுநீரக கல் பாதிப்பு வந்திருக்கிறதா என்ற விசாரணை என சிலவற்றை கேட்டு அறிந்து கொண்டு, உங்களுடைய வாழ்க்கை நடைமுறையில் மேற்கொள்ளப்படவேண்டிய சில மாற்றங் களை குறித்து பரிந்துரைப்பார். இதனை பின்பற்றினால் சிறுநீரக கல் பிரச்சினை மீண்டும் வராது.

வாழ்க்கை நடைமுறை மாற்றங்களில் தண்ணீர் அருந்தும் அளவு தான் முக்கிய மானது. நாளொன்றுக்கு இரண்டு லீற்றர் சிறுநீர் போகுமளவிற்கு தண்ணீரை அருந்த வேண்டும். ஏனைய திரவங்களை விட தண்ணீரே பாதுகாப்பானது, சிறந்தது. வெப்ப நாடான நம் நாட்டில் சுமார் நாளொன்றிற்கு மூன்று முதல் நான்கு லீற்றர் வரை தண்ணீர் பருகவேண்டும். இந்த தண்ணீரை நீங்கள் ஒரே தவணையில் குடித்துவிடக்கூடாது. இதனை நீங்கள் நாள் முழுவதும் பகிர்ந்து அருந்தவேண்டும். இப்படி அருந்தினால் தான் சிறுநீரில் கல்லை உண்டாக்கும் இரசா யனங்களின் அடர்த்தி குறைந்து, அவை கல்லாக மாறாமல் இருக்கும்.

முதல் முறையில் சிறுநீரக கல் பிரச் சினை ஏற்பட்டபோது, மருத்துவர்கள் அந்த கல் கல்சியம் கற்கள் என்று குறிப்பிட்டிருந்தால், கல்சியம் நிறைந்த உணவுப் பொருளான பால், பன்னீர் போன்ற பால் சார்ந்த பொருள்களை முற்றாக தவிர்க்கவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய ஆய்வுகளின் படி சிறுநீரகத்தில் கல்சியம் கற்கள் மீண்டும் வந்துவிட்டால் அதனை குறைப்பதற்கான நவீன சிகிச்சை கண்டறியப்பட்டுள்ளன. அதனால் மேற்கண்ட உணவுப் பொருள்களை தவிர்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கால்சியம் மாத்திரைகளை முற்றாகத் தவிர்க்கவேண்டும்.

அதே சமயத்தில் உணவில் உப்பின் அளவை குறைப்பது அவசியம். அத்துடன் விற்றமின் = D சத்துள்ள மாத்திரைகளையும், கால்சியம் உள்ள அல்சர் மாத்திரைகளையும் தவிர்க்கவேண்டும். உங்கள் சிறுநீர் அதிக அமிலத்தன்மை கொண்டதாகவோ அல்லது உங்களது சிறுநீரக கல்லில் யூரிக் ஆசிட் இருந்திருந்தாலோ அசைவ உணவு வகை களான கோழி, மீன், ஆடு ஆகியவற்றை தவிர்க்கவேண்டும்.

வெகு சிலருக்கு அரிததாக சிஸ் டின் எனப் படும் அபூர்வ கற்கள் சிறுநீரகத்தில் இருந்து எடுத்திருப்பார்கள். இவர்கள் தினமும் ஒரு காலன் அளவிற்கு தண்ணீரை குடித்துக் கொண்டேயிருக்கவேண்டும்.

அப்போது தான் அந்த சிஸ் டின் என்ற இரசாயனம் சிறுநீரில் படியாமல் இருக்கும்.

அதே சமயத்தில் உங்களது முதல் முறை சிறுநீரக கல் பரிசோதனைக்கு பின், அவை கால்சியம் கற்கள் என்று உறுதிப் படுத்தப்பட்டிருந்தால், சொக்லேட், கோகோ கலந்த திண்பண்டங்கள், ராகி, பொப்கார்ன், சோயா, முட்டை மஞ்சள் கரு, இறால் மீன், ஆட்டு ஈரல், ஆட்டு மூளை, நாட்டுச் சர்க்கரை, அதிக உப்புள்ள உணவுகள், முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகளை தவிர்க்க வேண் டும்.

வேறு சிலருக்கு முதல் முறை சிறுநீரக கல் பரிசோதனைக்கு பின், அவை ஆக்சலேட் கற்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், முருங்கைக் கீரை, பசலைக் கீரை, கரு வேப்பிலை சட்னி, பீட்ரூட், மரவள்ளி மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்குகள், வாழைப்பூ, பச்சை மிளகாய், பழங்கள், நெல்லிப்பழம், பலாப்பழம், மாம்பழம், மாட்டிறைச்சி, தேநீர், பீர் ஆகியவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும்.

மேலும் சிலர் முதல் முறையாக சிறு நீரக கல்லால் பாதிக்கப்பட்டு, அவை பரி சோதனைக்கு பின் யூரிக் ஆசிட் கற்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், பீன்ஸ், கருவாடு, இறைச்சி, மீன், கோழி, ஓட்ஸ் பட்டாணி ஆகியவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும்.

இத்தகைய உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளத் தொடங்கினால் இரண் டாவது முறையாகவோ அல்லது மீண்டும் மீண்டும் சிறுநீரக கல் சிக்கல் ஏற்படாது.

டொக்டர்.மெய்யப்பன்,

தொகுப்பு: அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15