ABU எனப்படும் ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 63ஆவது பொதுச் சபை மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெறும் தொழினுட்ப மற்றும் நிபுணத்துவக் குழுக்களின் கலந்துரையாடல்கள் இன்றும் நடைபெறவுள்ளன.
இந்த கலந்துரையாடல்கள் கொழும்பு சினமன் லைஃப் சிட்டி ஒப் ட்ரீம்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளன.
வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான இம்மாநாடு நவம்பர் 03 ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், இந்த மாநாட்டை மகாராஜா ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை ஒத்துழைப்பு வழங்குகின்றது. பொதுச்சபையின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மகாராஜா ஊடக வலையமைப்பு மற்றும் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல்,
" 63 ஆவது ABU பொதுச்சபை மாநாட்டை நடத்தும் உத்தியோகபூர்வ ஊடகப்பங்காளராக இலங்கையை உலக அரங்கில் மிளிரச் செய்வது தொடர்பில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
உலகின் பாரிய ஊடக ஒன்றியத்தின் துறைசார் தலைவர்கள் ஒன்றுகூடும் இந்த நிகழ்வானது, எமது அழகான இலங்கையை உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான ஓர் அற்புதமான வாய்ப்பாகும் என தெரிவித்தார்.
அதேவேளை, “வேகமாக மாறிவரும் ஒலிபரப்புத் துறையில் ஊடகவியலாளர்கள் தங்களது கருத்துக்களைப் பரிமாற்றிக்கொள்ளவும், ஒத்துழைப்பை வளர்க்கவும், புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் இந்த நிகழ்வு சிறந்த தளத்தை உருவாக்குகிறது. வளர்ந்து வரும் ஒலிபரப்புப் போக்குகள், ஊடக மீள் திறன், செயற்கை நுண்ணறிவு சார்ந்த மாற்றங்கள், பொதுச்சேவை ஊடகங்கள் , பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் ஆழமான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இதனூடாக பங்கேற்பவர்களுக்கு கிடைக்கும்" என ABU அமைப்பின் துணைத் தலைவரும் சீனாவின் NRTA/RTPRC சர்வதேச ஒத்துழைப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமுமான ஸோ ஜிஹொங் தெரிவித்துள்ளார்.
ABU அமைப்பின் செயலாளர் நாயகம் அஹமட் நதீம் கருத்துத் தெரிவிக்கையில்,
'அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான ஊடகம்: உண்மை, நம்பிக்கை ,மாற்றம்' என்னும் தொனிப்பொருளின் கீழ், 2026 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நவம்பர் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், ஆசிய-பசிபிக் பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பாலுள்ள நாடுகளிலிருந்தும் 350 க்கும் மேற்பட்ட ஒலிபரப்பாளர்கள், ஊடகத் தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பங்காளர்கள் ஒன்று கூடவுள்ளனர்.
'பொதுச் சபை மாநாடு மற்றும் அதனுடன் இணைந்த கூட்டங்கள் ABU அமைப்பின் இந்த வருடத்திற்கான மிக முக்கிய நிகழ்வாகும். இலங்கை முதன்முறையாக இதனை நடத்தும் நாடாக இருப்பதையிட்டு நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன், தனியார் ஒலிபரப்பு நிறுவனமொன்று இந்த மாநாட்டை ஏற்பாடு செய்வது இதுவே முதன் முறையாகும் என குறிப்பிட்டார்.

முக்கிய தகவல்கள்
- உலகின் அரைவாசிப் பகுதியை உள்ளடக்கியதுடன், உலக சனத்தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோரைச் சென்றடைகிறது.
- ABU அமைப்பு 66 நாடுகளிலுள்ள 225 நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது.
- 1964 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு, மலேசியாவின் கோலாலம்பூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ABU, கூட்டு ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு ,ஊடகத்துறை மேம்பாட்டிற்கான தளமாகச் செயற்படுகிறது.
இந்த 5 நாள் நிகழ்வின் ஒரு பகுதியாக, இரத்மலானையிலுள்ள ஸ்டெய்ன் கலையக வளாகத்தில் நானை (02) திங்கட்கிழமை 15 ஆவது ABU கானத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதில் ஆசியபசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பத்து நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலைஞர்கள் ஒன்றிணைந்து, பல்வேறுபட்ட இசை வடிவங்கள், கலாசாரம், மொழிகள் ,பாரம்பரியங்களைக் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.
இலங்கையின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களான காலி ,பெந்தோட்டை ஆகிய இடங்களுக்கான சுற்றுலாப் பயணத்துடன் இந்த மாநாடு இனிதே நிறைவடையவுள்ளது.
இது இலங்கையின் கலாசாரம், பாரம்பரியம், விருந்தோம்பல் பண்புகளை சர்வதேச பிரதிநிதிகளிடையே கொண்டு சேர்ப்பதாக அமையும்.
இந்த நிகழ்விற்கு வெளிவிவகார அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் நிறுவனம், இலங்கை பொலிஸ், கொழும்பு மாநகர சபை மற்றும் ருஹுணு சுற்றுலாப் பணியகம் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் பல திணைக்களங்கள் ஆதரவளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM