30 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தம்பதிகளனென அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 30 மில்லியன் ரூபா பெறுமதியான 2.7 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண் 30 வயதுடையவரெனவும் ஆண் 54 வயதுடையவரெனவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்த வந்த விமானத்திலேயே இலங்கை வந்துள்ளனர். இதற்கு முன்னர் குறித்த பெண் இலங்கைக்கு 6 தடவையும் ஆண் 2 தடவையும் இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸாரின் போதைவஸ்து தடுப்பு பிரிவினரின் ஆரம்ப கட்ட விசாணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.