இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் பல பிர­தே­சங்­களில் சேவைக்கு அமர்த்­தப்­பட்­டுள்ள இ.போ.ச. மற்றும் தனியார் பஸ் வண்­டி­க­ளிலும் மற்றும் கொழும்­பி­லி­ருந்து இரத்­தி­ன­புரி வீதி வழி­யாக எம்­பி­லி­பிட்­டி, மொன­ரா­ கலை, சூரி­ய­வெவ, இறக்­கு­வானை, பதுளை ஆகிய பகு­தி­களை நோக்கி செல்லும் இ.போ.ச. மற்றும் தனியார் பஸ் வண்­டி­க­ளிலும் பய­ணி­க­ளுக்கு மிகுதிப் பணம் வழங்­கு­வ­தில்லை என பொது மக்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

மேற்­படி மாவட்­டத்தில் சேவையில் ஈடு­படுத்­தப்­பட்­டுள்ள பெரும்­பா­லான இ.போ.ச மற்றும் தனியார் பஸ் வண்­டி­க­ளிலும் மற்றும் கொழும்­பி­லி­ருந்து இரத்­தி­ன­புரி வீதி வழி­யாக எம்­பி­லி­பிட்­டி, மொன­ரா­கலை, சூரி­ய­வெவ, இறக்­கு­வானை, பதுளை ஆகிய பகு­தி­களை நோக்கி செல்லும் பெரும்­பா­லான இ.போ.ச மற்றும் தனியார் பஸ் வண்­டி­களில் பய­ணிக்கும் பய­ணிகள் நடத்­து­ன­ரிடம் பணம் கொடுத்து பயணச்சீட்டு கேட்­கும்போது நடத்­து­நர்கள் பய­ணி­க­ளிடம்  பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கட் வழங்கி விட்டு,  அவர்­க­ளுக்கு 15 ரூபா மற்றும் அதற்குகுறை­வாக மிகுதி பணம் வழங்க இருப்பின் அவற்றை வழங்­கு­வ­தில்லை எனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.