கான்ட்ராஸ்ட் இன்டீயூஸ்டு கிட்னி இன்ஜுரி எனும் சிறுநீரக பாதிப்பிற்கான சிகிச்சை

Published By: Digital Desk 2

31 Oct, 2026 | 02:40 PM
image

எம்மில் சிலருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க வைத்தியர்கள் சி டி ஸ்கேன் எனும் பிரத்யேக ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பர்.

இத்தகைய சி டி ஸ்கேன் பரிசோதனை நிறைவு செய்த பிறகு சிலருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் கான்ட்ராஸ்ட் இன்டீயூஸ்டு கிட்னி இன்ஜுரி என குறிப்பிட்டு, அதற்கு சிகிச்சை அளிப்பர்.

பொதுவாக சி டி ஸ்கேன் செய்யும் போது அல்லது ஓஞ்சியோகிராம் பரிசோதனையை மேற்கொள்ளும் போது ரத்த நாளங்களை துல்லியமாக அவதானிக்க வைத்தியர்கள் கான்ட்ராஸ்ட் எனும் ரசாயனம் கலந்த சாயத்தை பாவிப்பார்கள். சிலருக்கு இந்த ரசாயனம் கலந்த சாயத்தின் காரணமாக சிறுநீரகத்தில் பாதிப்பு உண்டாகும். இது சி டி ஸ்கேன் அல்லது ஓஞ்சியோகிராம் பரிசோதனையை மேற்கொள்ளும் அனைவருக்கும் ஏற்படுமா? என்றால் இல்லை என உறுதியாக கூறலாம்.

அதே தருணத்தில் இத்தகைய பரிசோதனைக்கு முன்பு நோயாளிகள் நீரிழிவு, நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு ஆகிய பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றிருந்தால் அல்லது அது தொடர்பான நாட்பட்ட பாதிப்பு நீடித்தால் அவர்களில் சிலருக்கு இத்தகைய சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடும்.

இத்தகைய சி டி ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகு சிறுநீரகம் பாதிப்படைந்தது குறித்த அறிகுறிகள் வெளிப்படையாக தெரிவதில்லை. ஆனால் சிலருக்கு குருதி பரிசோதனையில் கிரியாட்டினின் அளவு இயல்பான அளவைவிட அதிகரித்திருக்கும். அதே தருணத்தில் சிறுநீர் வெளியேறும் அளவும் குறைந்திருக்கும்.

இதில் சிலருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... மூச்சு திணறல், கால் வீக்கம் ஆகிய அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதற்கு உடனடியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

சி டி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளும் போது நோயாளிகளுக்கு நரம்பு வழியாக செலுத்தப்படும் அயோடின் கலந்த சாயம் சிலருக்கு அவர்களின் சிறுநீரகத்தில் உள்ள ரத்த நாளங்களை பாதிக்கச் செய்து அங்குள்ள திசுக்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தற்காலிகமாக தடை செய்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரையின் அளவு காரணமாக நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் நாட்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பிற்கு ஆளாகியவர்கள் ஆகியோர் இத்தகைய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.

இதன் காரணமாகவே சி டி ஸ்கேன் பரிசோதனை செய்வதற்கு முன்பும், பின்பும் நோயாளிகளுக்கு மருத்துவத் துறை ஊழியர்கள் தண்ணீர் அருந்த அறிவுறுத்துவார்கள் அல்லது பிரத்யேக திரவத்தை செலுத்தி நீர்ச்சத்தை பராமரிப்பார்கள்.

அதே தருணத்தில் நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் என்று பரிசோதனைக்கு முன்னரே தெரிவித்தால் இத்தகைய பரிசோதனையின் போது பாவிக்கப்படும் ரசாயனம் கலந்த சாயத்தின் வீரியத்தை குறைத்து பாவிப்பார்கள்.

மேலும் இத்தகைய பாதிப்பு தற்காலிகமானது தான். இதனை தொடர் மருத்துவ கண்காணிப்பின் மூலம் சீரடைய செய்யலாம்.‌ வெகு சிலருக்கு இத்தகைய பாதிப்பு தீவிரமானதாக இருந்தால், உடனடியாக டயாலிசிஸ் எனும் சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

வைத்தியர் ஜெய் அவினாஷ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெல்விக் அசிடபுலர் ஃப்ராக்சர் எனும் இடுப்பு...

2026-11-11 16:42:12
news-image

ஸ்போண்டிலோஸிஸ்டெசிஸ் எனும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும்...

2026-11-10 15:59:08
news-image

நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-11-07 16:35:21
news-image

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனும் இதய தசை...

2026-11-06 18:17:18
news-image

பித்தப்பை சுவர் சிதைவு நோய் பாதிப்பிற்கான...

2026-11-05 16:52:08
news-image

அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

2026-11-04 14:01:10
news-image

கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை...

2026-11-03 14:47:47
news-image

வாஸ்குலர் ரிங் எனும் பிறவி இதயக்...

2026-11-02 13:47:27
news-image

கான்ட்ராஸ்ட் இன்டீயூஸ்டு கிட்னி இன்ஜுரி எனும்...

2026-10-31 14:40:04
news-image

டிரான்சியன்ட் இஸ்கிமீக் அட்டாக் எனும் தொடக்க...

2026-10-30 16:33:06
news-image

குரல் நாண் பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும்...

2026-10-28 15:06:37
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பை...

2026-10-27 14:59:16