இவ்­வ­ருட இறு­திக்குள் இலங்கை அணிக்கு நிரந்­தர தலைமைப் பயிற்­சி­யாளர் நிய­மிக்­கப்­ப­டுவார் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது.

இலங்­கையின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக இருந்த கிரஹம் போர்ட் தென்­னா­பி­ரிக்கத் தொடரில் இலங்கை அணி படு­தோல்­வியை சந்­தித்­த­துடன் இரா­ஜி­னாமா செய்து நாடு திரும்­பினார்.

அதன்­பி­றகு களத்­த­டுப்பு பயிற்­சி­யா­ள­ராக இருந்த நிக் போதஸ் இடைக்­கால பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

இந்­நி­லையில் நிரந்­தர தலைமைப் பயிற்­சி­யாளர் இவ்­வாண்டு இறு­திக்குள் நிய­மிக்­கப்­ப­டுவார் என்றும் அதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்று வரு­வ­தா­கவும் இலங்கைக் கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா குறிப்­பிட்டார்.

ஆனால் யார் யாருடன் பேச்­சு­வார்த்தை நடத்துகிறோம்  அவர்கள் எந்தெந்த நாட்டுக் காரர்கள் என்று கூற முடியாது என அவர் மறுத்துவிட்டார்.